வேலூர், ஜூன் 23-
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என். மணிவண்ணனின் உத்தரவின் பேரில் குடியாத்தம் உட்கோட்டம் கே.வி. குப்பம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேப்பநரி கிராமத்தில்
சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் எம்.டி. இருதயராஜ் அறிவுறுத்தலின்படி, காவல் உதவி ஆய்வாளர் சிவகுமார் மற்றும் புள்ளியல் ஆய்வாளர் அருணா, இணைய வழி குற்றப்பிரிவு பெண் தலைமை காவலர் சசிகலா, பெண் தலைமை காவலர் தனலட்சுமி, ஆகியோர் வேப்பநேரி பொதுமக்களிடம் சமூக நீதி , சமத்துவம், மனிதநேயம், மனித உரிமைகள் ,எஸ்.சி./எஸ்.டி., திட்டங்களைப் பற்றியும், இணையதள குற்றங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், இலவச உதவி எண்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பற்றிய துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு விநியோகித்தனர். இதன் வாயிலாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 100 க்கும் மேற்பட்ட பொதுமக்களும், பெண்களும் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இவ்வாறு வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக பத்திரிகை செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்தியாளர் வாசுதேவன்

Comments
Post a Comment