வேலூர்,ஜூன் 23-
காட்பாடி அருகே உள்ள சத்திரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம் மற்றும் ஆங்கில வழி கல்வி முதல் வகுப்பு தொடக்க விழா நடைபெற்றது.வேலூர் மாவட்டம், காட்பாடி தாராபடவேடு கம்பர் தெருவில் உள்ள சத்திரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் 2023 - 2024 ஆம் கல்வியாண்டில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் மற்றும் ஆங்கில வழி முதல் வகுப்பு வகுப்பு தொடக்க விழா விமரிசையாக வட்டார கல்வி அலுவலர் சரவணன் முன்னிலையிலும்,பள்ளி தலைமை ஆசிரியர் ஏ.டி. அல்போன்ஸ் கிரி தலைமையிலும் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாநகராட்சி 1-வது மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி மேலாண்மை குழு கூட்டம் மற்றும் ஆங்கில வழி முதல் வகுப்பை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பள்ளியில் புதியதாக சேர்ந்த மாணவர்களுக்கு பரிசுத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கி, மாணவ, மாணவிகள் மத்தியில் சிறப்புரையாற்றினார். பள்ளி மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் ஆசிரியர் மகாலட்சுமி அனைவருக்கும் நன்றி கூறினார்.
செய்தியாளர் வாசுதேவன்

Comments
Post a Comment