வேலூர் மாவட்டம், கணியம்பாடி பேருந்து நிலையத்தில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சி.பி.ஐ.எம்.எல்., கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வேலூர் மாவட்டம் ,கணியம்பாடி பேருந்து நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி( மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) விடுதலை அகில இந்திய விவசாயிகள் கிராமப்புற தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்டத் தலைவர் ஆர்.தசரதன் தலைமையில், மாணிக்கம், கோபால், சாந்தி, மலர், சதீஷ், ஆகியோர் முன்னிலையில், சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் எம்.சரோஜா கலந்து கொண்டு பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மோடி ஆட்சியை வெளியேற்றுவோம் மக்கள் உரிமைப் பெறுவோம், 2022க்குள் அனைவருக்கும் வீடு என்றது அரசாங்கம் ஆனால் 2023 முடிய போகிறது இன்னும் வீடு கிடைக்கவில்லை, நாட்டின் பல முக்கிய துறைகளை சீரழித்ததை போலவே மோடி அரசாங்கம் தேசிய ஊரக வேலை திட்டத்தையும் சீரழித்து வருகிறது. 30 கோடிக்கு மேற்பட்ட கிராமப்புற தொழிலாளர்களை பட்டினி போட்டுக் கொள்ளும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆறுமுகம், சிம்பு தேவன் ,ஏழுமலை, சரவணன், கண்ணதாசன், ரவி, தமிழரசன், செந்தில்நாதன், பாத்திமா உட்பட 50-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
முன்னதாக கணியம்பாடி அம்பேத்கர் சிலை அருகில் பேரணி தொடங்கி கணியம்பாடி பேருந்து நிலையத்தில் நிறைவு பெற்றது.
செய்தியாளர் வாசுதேவன்

Comments
Post a Comment