வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவின் பேரில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பவர்கள் மற்றும் கடத்துபவர்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனடிப்படையில் பொன்னை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாதண்டகுப்பம் மூன்று வழிச்சாலையில் ஃபோர்டு ஐகான் காரில் கர்நாடக மாநிலம், பெங்களூருவில் இருந்து மதுபானங்கள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், பொன்னை காவல் நிலைய உதவி ஆய்வாளர் சீனிவாசன், எஸ்எஸ்ஐ ராஜேந்திரன், எஸ்எஸ்ஐ ரவி, தனிப்பிரிவு எஸ்எஸ்ஐ மணவாளன், காவலர்கள் தங்கராஜ் மற்றும் சந்தோஷ் குமார் ஆகியோர் மேற்கொண்ட வாகன சோதனையில் "டாப் ஸ்டார்" என்ற பெயர் கொண்ட 90ML அளவு கொண்ட 2112 மது பாக்கெட்டுகள் 384 மது பாக்கெட்டுகள் என மற்றும் 180 ML அளவு கொண்ட மொத்தம் 2496 மது பாக்கெட்டுகள் மற்றும் கடத்துவதற்கு பயன்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்தனர். அத்துடன் மது கடத்திய வினோத் குமார், ஆனந்தன் என்ற இருவர் மீது வழக்குப் பதிவு செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
செய்தியாளர் : வாசுதேவன்

Comments
Post a Comment