பரிசார்த்த முறையில் ரயில் பயணிகளின் கோரிக்கையை ஏற்று தென்னக ரயில்வே ராசிபுரம் ரயில் நிலையத்தில் 3 விரைவு ரயில் வண்டிகளுக்கு நின்று செல்ல அனுமதி வழங்கி இருக்கிறது
நாமக்கல் ஜுன் 24
நாமக்கல் மாவட்டம் நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று , தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஊராட்சிகளுக்கு குப்பை சேகரிக்கும் மின் கல வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ. இராமலிங்கம் ஆகியோர் இந்த ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கீரம்பூர் கீழ் சாத்தனூர் ராசபாளையம் உள்ளிட்ட 13 கிராம ஊராட்சிகளுக்கு தலா 1 வீதம் 13 மின்கல வாகனங்களை வழங்கி கொடி அசைத்து தொடங்கி வைத்து அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்களிடம் ஒப்படைத்தார்
இந்த வாகனம் ஒன்றின் விலை தலா ரூ 2 லட்சத்து 50 ஆயிரம் ஆகும். 13 வாகனங்களின் மொத்த மதிப்பு ரூ 32 லட்சத்து 50 ஆயிரம் ஆகும்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே. ஆர். என். ராஜேஷ்குமார் கூறும்போது :
பரிசார்த்த அடிப்படையில் நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் ரயில் நிலையத்தில் ரயில் பயணிகளின் மற்றும் ரயில் பயன்பாட்டாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று ரயில் வண்டி எண்கள் : 16733,16734 ஆகிய ராமேஸ்வரம் -ஓகா- ராமேஸ்வரம் மார்கத்தில் பயணிக்கும் வாராந்திர விரைவு ரயிலையும்
இரயில் நம்பர் 22651 எம். ஜி. ஆர் .சென்னை சென்ட்ரல் - பாலக்காடு தினசரி விரைவு ரயில் வண்டி
நம்பர் 17236 நாகர்கோவில் எஸ். எம். பி .டி.பெங்களூர் தினசரி விரைவு ரயில் வண்டி ஆகியவைகள்
இராசிபுரம் இரயில் நிலையத்தில் நின்று செல்ல தென்னக ரயில்வே அனுமதி வழங்கி இருப்பதாகவும்
இவைகள் வரும் ஜூலை 6 தேதிமுதல் நடைமுறைக்கு வருவதாகவும் ஓகா- இதுராமேஸ்வரம் வாராந்திர விரைவு ரயில் வரும் 4 ஆம் தேதியே நடைமுறைக்கு வருவதாகவும் மாநிலங்களவை உறுப்பினர் கே .ஆர்.என் ராஜேஷ்குமார் தெரிவித்தார் .
மேலும் ஓகா- இராமேஸ்வரம் வாராந்திர விரைவு ரயில் 04.07.2023 முதல் செவ்வாய்க்கிழமைகளில் இரவு 11:59 முதல் 12 மணி வரை இராசிபுரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்றும் ஓகா- இராமேஸ்வரம் வாராந்திர விரைவு ரயில் மறு மார்க்கத்தில் 07.07.2023 முதல் சனிக்கிழமைகளில் இராசிபுரம் ரயில் நிலையத்தில் அதிகாலை 4.59 முதல் 5 மணி வரை நின்று செல்லும் என்றும்
வண்டி எண்: 22651 எம்.ஜி.ஆர்..சென்னை சென்ட்ரல் - பாலக்காடு மார்க்கமாக செல்லும் விரைவு ரயில் வரும் 6 ஆம் தேதி முதல் தினந்தோறும் 3 மணி முதல் 3மணி 9 நிமிடம் வரை இராசிபுரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்றும்
இது வரும் 6ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும்
அதேபோல ரயில் வண்டி எண் 17236 நாகர்கோயில்- எஸ் .எம் .பி .டி பெங்களூரு தினசரி விரைவு ரயில் வண்டியானது வரும் 6 ஆம் தேதி முதல் நாகர்கோவில் இருந்து புறப்பட்டு தினந்தோறும் 3 மணி 19 நிமிடத்தில் இருந்து 3 மணி 20 நிமிடம் வரை இராசிபுரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்றும் மாநிலங்களவை உறுப்பினர் கே. ஆர் .என் ராஜேஷ்குமார் தெரிவித்தார்
முக்கியமாக பரிசார்த்த முறையில் இந்த விரைவு ரயில் வண்டிகள் இராசிபுரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்றும்
இந்த வண்டிகளில் இராசிபுரத்தில் இருந்து பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையை கணக்கிட்டு தான் தொடர்ந்து வண்டிகளை ரயில்வே நிர்வாகம் இது மாதிரி இராசிபுரம் ரயில் நிலையத்தில் நிறுத்தி சொல்லும் நடவடிக்கை மேற்கொள்வார்கள்
ஆகவே இராசிபுரத்து மக்கள் அருகாமையில் உள்ள சேலத்திலும் அல்லது நாமக்கலிலும் இறங்காமல், ஏறாமல் இராசிபுரம் என்று டிக்கெட் புக் செய்து ராசிபுரத்திலேயே கட்டாயமாக இறங்க வேண்டும் அப்போதுதான் இந்த நடைமுறை நிரந்தரம் ஆக்கப்படும் என்றும் இராசிபுரம் நகரத்தில் இருந்து பயணிக்கும் ரயில் பயணிகளுக்கு மாநிலங்களவை உறுப்பினர் கே .ஆர் .என் ராஜேஷ்குமார் வேண்டுகோள் வைத்தார்
மேலும் இராசிபுரம் ரயில் நிலையத்தில் வண்டிகளை நிறுத்தி செல்ல உத்தர பிறப்பித்த தென்னக ரயில்வே அதிகாரிகளுக்கு நன்றியையும் அவர் தெரிவித்தார்
இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சி. பாஸ்கர், ப. ஜெயக்குமாரன் ஊராட்சி மன்ற தலைவர்கள், செயலாளர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் முத்தையா

Comments
Post a Comment