பொன்னேரியில் வருவாய் துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின்படி நடைபெற்ற இந்த பேரணியை சார் ஆட்சியர் ஐஸ்வர்யா துவக்கி வைத்தார். உ.நா.அரசினர் கலைக்கல்லூரியில் துவங்கிய பேரணியில் பங்கேற்ற மாணவர்கள் போதைப்பொருளை தடுப்போம், போதை வாழ்க்கைக்கு கேடு உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பியபடி ஊர்வலமாக சென்றனர்.
இந்த பேரணி அண்ணா சிலை அருகில் நிறைவடைந்தது. பின்னர் அனைவரும் போதைப்பொருட்களை ஒழிக்க ஒன்றிணைவோம் என உறுதிமொழி எடுத்து கொண்டனர். இதில் வட்டாட்சியர் செல்வகுமார், நகர்மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் மற்றும் வருவாய் துறையினர், தன்னார்வலர்கள், கல்லூரி மாணவர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: சந்திரசேகர்

Comments
Post a Comment