திண்டுக்கல் அருகே ஆற்றில் குளிக்க சென்ற வாலிபர் நீரில் மூழ்கி பலியானார். அவரது உடல் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த போது கண்ணை எலி கடித்து குதறியதால், உறவினர்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர். திண்டுக்கல் பெரியகோட்டையை சேர்ந்த இளைஞர் முனியப்பன் (வயது 17), இன்று நண்பர்களோடு சந்தனவர்த்தினி ஆற்றில் குளித்தபோது பரிதாபமாக பலியானார்.
அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தபோது, இறந்த முனியப்பனின் கண்ணில் எலி கடித்ததாக உறவினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இது குறித்து திண்டுக்கல் அரசு மருத்துவமனை டீன் வீர மணிகண்டனிடம் புகார் தெரிவித்தனர். அவர் டாக்டர்கள் மூலம் ஆய்வு நடத்தி எலி வரும் பகுதியை வலை வைத்து அடைப்பதாக உறுதி அளித்தார்.
செய்தியாளர்: அரியநாயகம்

Comments
Post a Comment