சென்னை முட்டுக்காட்டில், மத்திய அரசின் சமூக நீதித்துறையின் கீழ் இயங்கி வரும் மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்திற்காக தேசிய நிறுவனம், மொபிஸ் இந்தியா அறக்கட்டளையுடன் இணைந்து அந்நிறுவனத்தின் நிறுமச் சமுதாய பொறுப்புத் திட்டத்தின் கீழ் கற்றல் குறைபாடு உள்ள 10,000 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் வழங்குவதற்கான நல்லதொரு திட்டத்திற்கு முன்வந்தனர்.
முதற்கட்டமாக இத்திட்டம் தமிழ்நாடு, மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய 3 மாநிலங்களில் செயல்படுத்தப்படுகிறது. சி.எஸ்.ஆர் பங்களிப்பின் கீழ் ரூ.4.14 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் உள்ள சிறப்பு பள்ளியில் 350- க்கும் மேற்பட்ட கற்றல் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
வழக்கறிஞர் முனைவர் அபிநயா, முனைவர் அமர்நாத், ஸ்டாலின் அருள் ரீகன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாபு, மொபிஸ் இந்தியா அறக்கட்டளையின் நிர்வாக அலுவலர்கள் பிரேம் சாய், லக்ஷ்மணன், செல்வகுமார் மற்றும் செந்தில்குமார் முன்னிலையில் இந்த நல்முயற்சி அரங்கேறியது. இதுபோன்ற நலத்திட்டங்கள், மாற்றுத்திறனாளிகள் தனித்து செயல்படவும் பிறரின் உதவியை எதிர்ப்பார்க்காமல் தாங்களே சுயமாக வாழ்க்கையை வாழ்வதற்கும் பெரிதும் உதவும் என்று வழக்கறிஞர் முனைவர் அபிநயா தெரிவித்தார்.
செய்தியாளர்: அகமது அலி


Comments
Post a Comment