செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் அங்காள பரமேஸ்வரி கோவில் தெருவில் வசிப்பவர் கார்த்திகேயன் (வயது 24 ) அவரது நண்பர் அதே பகுதியை சார்ந்த விக்கி என்ற அஜித் (வயது 24 ) சார்லஸ் (வயது 26) இவர்கள் மூவரும் நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் அங்காள பரமேஸ்வரி கோவில் அருகே உள்ள மைதானத்தில் பேசிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த ஆறு பேர்கள் ஹெல்மெட் அணிந்து கொண்டு கத்தியை காட்டி மிரட்டி அரசியல் பிரமுகரின் ஒருவர் பெயரை சொல்லி அவர் வீடு எங்கே உள்ளது என கேட்டதில் அவர்கள் தெரியாது என்று பதில் கூறினார். இதனால் ஆத்திரமுற்ற அவர்கள் தனது கையில் இருந்த கத்தியால் சற்றும் தாமதிக்காமல் மூன்று பேரையும் தலை, கை, கால், கழுத்து ஆகிய பகுதிகளில் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்ற போது அருகே நிறுத்தப்பட்டு இருந்த மூன்று கார்களையும் கண்ணாடிகளையும் உடைத்து சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து மூவரும் செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு அவர்கள் பலத்த காயமடைந்து இரத்தம் வழிந்த நிலையில் இருந்த அவர்களை போலீசார் உடனடியாக அரசு ஸ்டாலின் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து செங்குன்றம் காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து சம்பவம் நடந்த இடத்தின் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆராய்ந்து மர்ம நபர்களை தேடி வருகிறார். மேலும் இதே கும்பல் இரவு இதேபோல வியாசர்பாடி, கொடுங்கையூர் ஆகிய பகுதிகளில் கடைகளில் உள்ள பொருட்களை உடைத்து சேதப்படுத்தியும், இருவரை கத்தியால் வெட்டியும் பின்னர் புழல் அடுத்த கதிர்வேடு பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த ஸ்டீபன் ராஜ் ( வயது 20 ) என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த இருசக்கர வாகனத்தை பறித்து சென்றது, போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. நேற்று முன்தினம் இரவு நடந்த இந்த தொடர் சம்பவத்தால் குற்றவாளியை பிடிக்க ஏழு தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
செய்தியாளர்: அகமது அலி



Comments
Post a Comment