Skip to main content

தேக்வாண்டோ போட்டியில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா..!

 பெங்களூரில் சர்வதேச அளவிலான தேக்வாண்டோ போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா, மலேசியா,கானா, பங்களாதேஷ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் கொசவப்பட்டி புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர் 16 பேர் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். 




இவர்களில் மூன்று பேர் தங்க பதக்கமும், நான்கு பேர் வெள்ளி பதக்கம், ஏழு பேர் வெண்கல பதக்கங்களை கைப்பற்றி சாதனைப்படுத்தினர். இந்நிலையில் சொந்த ஊருக்கு திரும்பிய மாணவருக்கு பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பள்ளி தாளாளர் ஜான்சன் எடின்பெர்க், தலைமையாசிரியர் செல்வநாயகம், உடற்கல்வி ஆசிரியர் தாமஸ் சேக்ஸ்ராஜ், பயிற்சியாளர் ஜெயசீலன் மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள் கலந்து கொண்டு பாராட்டினர்.


செய்தியாளர்: அரியநாயகம் 

Comments