செங்குன்றம் காமராஜர் நகர் பைபாஸ் சாலையில் மின்சார வாரிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் நள்ளிரவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இது பற்றி உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதின் பேரில் செங்குன்றம் இரவு நேர ரோந்து பணியில் இருந்த தீயணைப்பு துறை அதிகாரி பஞ்சவர்ணம் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனத்துடன் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.
சுமார் இரண்டு மணி நேரம் போராடி தீயை முற்றிலுமாக அனைத்தனர். இந்த தீ விபத்தில் அலுவலகத்தில் கணிணிகள் மற்றும் முக்கிய தஸ்தாவேஜிகள் எரிந்து நாசமாகியது. இது குறித்து செங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த தீ விபத்து எதனால் ஏற்பட்டது? என விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இந்த அலுவலகத்தில் மின்சார ஊழியர்கள் அஜாக்கிரதையாக சனிக்கிழமைகளில் இரவு வீக் எண்டு என்ற பெயரில், இரவு பணியில் இருப்போர் போதையில் இருப்பதாகவும், சிகரெட் பிடித்து அதனை அணைக்காமல் விட்டதால், இதுபோன்று அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட காரணம் என கூறப்படுகிறது.
செய்தியாளர்: அகமது அலி


Comments
Post a Comment