மாதவரம் ரவுண்டானா அருகில் உள்ள ஆந்திர பேருந்து நிலையத்தில் இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு திடீர் ஆய்வு மேற்கொண்டார். 2018 ஆம் ஆண்டு மாதவரம் ரவுண்டானா அருகே 8 ஏக்கர் நிலப்பரப்பில் 95 கோடி ரூபாய் செலவில் மாடி பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. இந்த ஆந்திர பேருந்து நிலையத்தில் பொதுமக்களின் வசதிக்காக இங்கிருந்து நெல்லூர், திருப்பதி, விஜயவாடா, ஹைதராபாத், போன்ற இடங்களுக்கு செல்லும் ஆந்திர பேருந்துகளும், செங்குன்றம், கும்மிடிப்பூண்டி, தடா, திருப்பதி செல்லும் தமிழக பேருந்துகளும் இயக்கப்பட்டது. ஆனாலும் இந்த பஸ் நிலையத்தில் பொதுமக்களின் பயன்பாடு குறைவாகவே காணப்பட்டது.
எனவே இதனை மேலும் விரிவாக்கம் செய்ய இன்று காலை இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திடீரென பஸ் நிலையத்திற்கு வந்து ஆய்வுகள் மேற்கொண்டார். கோயம்பேடு பஸ் நிலையத்தில் கூட்ட நெரிசலை குறைப்பதற்காகவே இந்த பஸ் நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த பஸ் நிலையத்தில் ஆந்திரா மாநிலம் செல்லும் பஸ்கள் மட்டுமல்லாது தமிழக பஸ்களும் மற்றும் மாநகர பேருந்து பஸ்களும் இங்கிருந்து இயக்கப்படப் போவதாக தெரிவித்தார்.
மேலும் அங்கு உள்ள வசதிகள் பற்றியும் ஓட்டுனர்கள் ஓய்வெடுக்கும் அறையை ஆய்வு செய்தும் பயணிகளின் ஓய்வு அறையை ஆய்வு செய்து, அங்கு என்னென்ன வசதிகள், குறைபாடு உள்ளது என கண்டறிந்து அவற்றை உடனே சரி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது சி எம் டி ஏ அதிகாரிகள், மாதவரம் மண்டல மாநகராட்சி அதிகாரிகள், மாதவரம் மண்டல குழு தலைவர் நந்தகோபால், பகுதி செயலாளர்கள் புழல் நாராயணன், துக்காராம் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
செய்தியாளர்: அகமது அலி

Comments
Post a Comment