பெண்களின் பாதுகாப்பு, அதிகாரம் ஆகியவற்றை வலியுறுத்தி நாடு முழுவதும் சைக்கிளில் பயணம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் தேசிய வீராங்கனையை வரவேற்று வாழ்த்துக்கள் தெரிவித்தார், வேலூர் சரக காவல் துணைத் தலைவர்.
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தேசிய மலையேற்ற வீராங்கனை ஆஷா மால்வியா, இந்த பெண் வீராங்கனை நாடு முழுவதும் 25 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பெண்களின் பாதுகாப்பு, அதிகாரம் ஆகியவற்றை வலியுறுத்தி நாடு முழுவதும் சைக்கிள் பயணத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றார். இந்த நிலையில் நேற்று வேலூர் மாவட்டத்திற்கு வருகை தந்தார், நாடு முழுவதும் சைக்கிளில் பயணம் செய்யும் தேசியவீராங்கனை ஆஷா மாலியாவை, வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் எம்.எஸ்.முத்துசாமி வேலூர் சரக அலுவலகத்திற்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்று, அவருடைய விழிப்புணர்வு பயணம் சிறக்க வாழ்த்துக்கள் தெரிவித்து பரிசுகளையும் வழங்கி கௌரவித்தார்.
செய்தியாளர்: வாசுதேவன்

Comments
Post a Comment