பொங்கல் திருநாளை முன்னிட்டு போலீஸ் பாய்ஸ் கிளப் மாணவ மாணவியர்களுக்கு கால்பந்து விளையாட்டு போட்டியை, கொளத்தூர் காவல்துறை கமிஷனர் ராஜாராம் துவக்கி வைத்தார்.
புழல் காவல் நிலையத்தின் சார்பில் போலீஸ் பாய்ஸ் கிளப் மாணவ மாணவிகள் 10 வயது சிறுவர் முதல் 15 வயது வரை உள்ளவர்களுக்கு அவர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் புழல் சரக உதவி கமிஷனர் ஆதிமூலம் தலைமையில் ஆய்வாளர்கள் சண்முகம் , விஜயபாஸ்கர் ஒருங்கிணைப்பாளர் விஜயன் ஆகியோரது முன்னிலையில் கால்பந்து விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாணவ மாணவிகள் மிகுந்த உற்சாகத்துடன் விளையாடினார்கள். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பொங்கல் பண்டிகை அன்று காவல் துணை ஆணையாளர் பரிசுகள் வழங்குவார்.
செய்தியாளர்: அகமது அலி


Comments
Post a Comment