ஜன. 10 வடசென்னை பகுதிகளில் ரவுடிசம் செய்து வந்த பிரபல ரவுடிகளான சேரா என்கிற ராஜேந்திரன் மற்றும் சோமு என்கிற சோமசுந்தரம், மற்றும் சேராமகன் கதிர் என்ற கதிராவின் கூட்டாளியான அன்பு என்ற கரிமேடு அன்பு, கடந்த பத்து வருடங்களாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இவர் மீது, பல்வேறு பகுதிகளில் நில மோசடி, கட்டப்பஞ்சாயத்து, செம்மரம் கடத்தல் போன்ற சட்ட விரோத செயல்கள், குற்ற செயல்கள் தொடர்பாக காவல் நிலையங்களில் வழக்குகள் பதிந்து உள்ளது.
கடந்த எட்டு மாதங்களாக சென்னை பெருநகர காவல் ஆணையரின் சிறப்பு பிரிவாகிய தீவிர குற்றவாளிகள் தடுப்பு பிரிவு மேற்கு மண்டல ஆய்வாளர் பார்த்திபன் தலைமையில், ஆந்திரா, கர்நாடகா போன்ற இடங்களில் தேடி வந்த நிலையில், இன்று அதிகாலை ஆந்திராவில் இருந்து ரெட்ஹில்ஸில் உள்ள, அவரது இரண்டாவது மனைவி பானு வீட்டிற்கு வரும்போது அதிரடியாக கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.



Comments
Post a Comment