தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வல்லம் பகுதிகளில், நெடுஞ்சாலைத் துறையின் கீழ் அகலப்படுத்தி மேம்படுத்தப்பட்ட சாலைப்பணிகளை, நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் பொறியாளர் சரவணன் ஆய்வு மேற்கொண்டார். தமிழக நெடுஞ்சாலை துறை சார்பில், சாலைகளை அகலப்படுத்தி மேம்படுத்தப்பட்ட சாலையாக மற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர், ஆய்வுக் கூடத்தின் போது அனைத்து சாலைகளையும் ஆய்வு செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டது.
அதன்படி தஞ்சை மாவட்டம் வல்லம், ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளில் நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் பொறியாளர் சரவணன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தஞ்சாவூர் கோட்டம் (நெ) தஞ்சாவூர் உட்கோட்டம் (நெ) தஞ்சாவூர் கோட்டத்தில் பரப்பு அடிப்படையில் உள்ள பராமரிப்பு மற்றும் மேம்பாடு திட்டத்தின் கீழ் அகலப்படுத்தி மேம்படுத்த திட்ட சாலைகளான வல்லம், ஒரத்தநாடு சாலை முடிவுற்ற பணிகளை ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது கண்காணிப்பு பொறியாளர் செந்தில் குமார், கோட்ட பொறியாளர் செந்தில் குமார், தரக்கட்டுப்பாடு கோட்ட பொறியாளர் சந்திரசேகர், சாலை பாதுகாப்பு கோட்ட பொறியாளர் புவனேஸ்வரி, உதவி கோட்ட பொறியாளர் கீதா, உதவி பொறியாளர் மோகனா மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வேங்கை குணா

Comments
Post a Comment