Skip to main content

காகிதப்புரட்சி நூல் அறிமுக விழா தஞ்சையில் நடைப்பெற்றது.!

தஞ்சாவூர் மாவட்ட வெற்றித்தமிழர் பேரவை சார்பில், த.ஸ்டாலின்- குணசேகரன் எழுதிய காகிதப்புரட்சி நூல் அறிமுக விழா, தஞ்சை பெசன்ட் அரங்கில்,1.9.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை,6:00- மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வெற்றித் தமிழர்ப் பேரவை மாவட்ட பொறுப்பாளர்,லயன்,எம்.எஸ். ஆசிப் அலி தலைமை தாங்கினார், வெற்றித்தமிழர்ப் பேரவை மாநில துணைப்பொதுச் செயலாளர், யோகம் இரா.செழியன் முன்னிலை வகித்தார். வெற்றித் தமிழர்ப் பேரவை பூதலூர் ஒன்றிய செயலாளர், நல்ல.சின்னையா வரவேற்புரை ஆற்றினார், மக்கள் சிந்தனைப் பேரவை  துணைத் தலைவரும், பேராசிரியருமான, கோ. விஜயராமலிங்கம் வாழ்த்துரை வழங்கினார். எழுத்தாளரும், இயக்குநருமான,முனைவர். பாரதி கிருஷ்ணகுமார் நூல் அறிமுக உரையாற்றினார்.மக்கள்சிந்தனை நிறுவனரும், தலைவரும், நூலாசிரியருமான,த. ஸ்டாலின் குணசேகரன் ஏற்புரை வழங்கினார். 

நிகழ்ச்சியின் நிறைவாக வெற்றித் தமிழர்ப்பேரவை பொறுப்பாளர், தரும.சரவணன் நன்றி கூறினார். இந்த நூல் வெளியீட்டு விழாவில் அறிஞர் பெருமக்கள் உரையில் சில கருத்துக்கள்: தொல்காப்பியர் பத்து,பத்து, புத்தகங்களை படித்துவிட்டுஒரு புத்தகத்தை உருவாக்கியவர்,21- வயதிற்கு மேல் உடல் வளராது,ஆனால் அறிவு வளர்ந்து கொண்டே போகும். ஆசிரியரிடம்கூர்மையான பார்வை இருக்கக்கூடாது,ஆசிரியர் இதனைக் கற்றுக் கொள்ள வேண்டும். எத்தனை புத்தகம் வாசித்தோம் என்பது முக்கியமல்ல, எத்தனை புத்தகங்களை உருவாக்கினோம் என்பது தான் முக்கியம். வாசிப்பை வளப்படுத்துதல் இந்தப் புத்.தகத்தின் எண்ணம், அடுத்த தலைமுறைக்கு புத்தகத்தை வாசிக்கும் பழக்கத்தை சொல்லிக் கொடுக்கப்பட வேண்டுமென இவ்வாறு பல்வேறு நல்ல கருத்துக்களை அடுக்கடுக்காய்  எடுத்துரைத்தார்கள். அவர்கள் பேசியகருத்துக்கள் அனைத்தும் செவிக்கு நல்ல உணவாக இருந்தது என்று தான் சொல்லப்பட வேண்டும்.


செய்தியாளர் வேங்கை குணா 

Comments