Skip to main content

கல்லீரல் உறுப்பு மாற்று சிகிச்சை, கிளெனீகல்ஸ் உடன் வரலாற்று சாதனையை நிகழ்த்தியிருக்கும் தஞ்சை மீனாட்சி மருத்துவமனை

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து, சாலை விபத்தால் பாதிக்கப்பட்டு மூளைச்சாவு அடைந்த நபர் ஒருவரின் கல்லீரல் தானமாக பெறப்பட்டு, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 40-வயதான ஆண் நோயாளிக்கு பொருத்தப்பட்டிருக்கிறது. வரலாற்று சிறப்புமிக்க ஒரு மைல்கல் நிகழ்வாக டெல்டா பிராந்தியத்தில் முதன்முதல் கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சையை, தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை சமீபத்தில் வெற்றி கரமாக மேற்கொண்டு இருக்கிறது.


கிளென்கல்ஸ் ஹெல்த் சிட்டி மருத்துவமனையின். ஒத்துழைப்போடு நடைபெற்ற இச்சிகிச்சை செயல்முறையில், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலிருந்து, சாலை விபத்தால் பாதிக்கப்பட்டு மூளை சாவு அடைந்த நபர், ஒருவரின் கல்லீரல் தானமாக பெறப்பட்டு, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த,40-வயதான ஆண் நோயாளிக்கு பொருத்தப்பட்டு அவருக்கு வாழ்க்கையில் புதிய தொடக்கத்தை தந்திருக்கிறது. பல்வேறு உறுப்பு மாற்று .சிகிச்சைகளுக்கு இந்தியாவில் புகழ்பெற்ற மையங்களுள் ஒன்றாக சென்னையில் அமைந்திருக்கும் கிளெனீகல்ஸ் மருத்துவமனையுடன்  டெல்டா பிராந்தியத்தில் பல்வேறு சிறப்பு பிரிவுகள் கொண்ட முன்னணி மருத்துவமனையான, தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை கூட்டான்மையை மேற்கொண்டிருக்கிறது, இதன் கீழ் கிளெனீகல்ஸ் மருத்துவமனையின் கல்லீரல் சிகிச்சை நிபுணர்கள் தஞ்சாவூருக்கு வருகை தந்து மீனாட்சி மருத்துவமனையிலுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சைகளையும், ஆலோசனைகளையும்,வழங்குகின்றனர். இந்த இரு மருத்துவமனைகளின் பல்வேறு துறைகளைச்சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்களை உள்ளடக்கிய ஒரு குழு இந்நோயாளிக்கு,8 -மணிநேரம் நீடித்த உறுப்பு மாற்று சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டிருக்கிறது. மீனாட்சி மருத்துவமனையின் இரைப்பைஅறுவை சிகிச்சைநிபுணர் டாக்டர்.பிரசன்னா. மயக்க மருந்தியல் நிபுணர் டாக்டர்.ஜி. ஆரிமாணிக்கம் மற்றும்கிளெனீகல்ஸ் கல்லீரலியல் மற்றும் கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சையில் துறையின் இயக்குனர், டாக்டர். ஜாய் வர்கீஸ், கல்லீரல் அறிவியல் மையத்தின் கிளினிக்கல் லீட் மற்றும் முதுநிலை நிபுணர்,டாக்டர் ரஜினிகாந்த் பாட்ஷா, மற்றும் மயக்க மருந்தியல் துறையின் தலைவர், டாக்டர். செல்வகுமார் மல்லீஸ்வரன், ஆகியோர் இக்குழுவில் இடம் பெற்றிருந்தனர். கடுமையான பொடுப்பு நிறைந்த ஈரல் பாதிப்பு நோயால் பாதிக்கப்பட்ட, இந்நோயாளி மீனாட்சி மருத்துவமனையில் பல மாதங்களாக கல்லீரலுக்கான சிகிச்சை பெற்று வந்திருந்தார். அவரது நிலைமை சீர்படுத்த மருந்துகள் பயனற்று போனபோது, கல்லீரல் உறுப்பு மாற்று சிகிச்சை மட்டுமே அவரது உயிரை காப்பாற்றுவதற்கான ஒரே வழிமுறையாக இருந்தது அவரது குடும்பத்திலிருந்து பொருத்தமான தானமளிப்பவர் இல்லாத காரணத்தால், அரசின் உறுப்பு மாற்று பதிவகத்தில் இந்நோயாளியின் பெயரும் சேர்க்கப்பட்டது. தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்த,சாலை விபத்தால் பாதிக்கபட்டு,மூளைச் சாவு அடைந்த நபர் ஒருவரின் கல்லீரல் அதிர்ஷ்டவசமாக இந்நோயாளிக்கு பொருத்தமானதாக இருந்தது. அதன்படி மூலைச்சாவு மூளைச் சாவு  அடைந்த நபரிடமிருந்து எடுக்கப்பட்ட கல்லிரல், தானமாக பெறப்பட்டு,மீனாட்சி மருத்துவமனையில் உறுப்பு மாற்று சிகிச்சைக்காக உடனடியாக கொண்டுவரப்பட்டது. சிக்கல் ஏதும் இன்றி நடைபெற்ற இந்த உறுப்பு மாற்று சிகிச்சைக்கு பிறகு நோயாளி விரைவாக இயல்பு நிலைக்கு திரும்பி, இப்போது நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார்.

 இச்சிகிச்சை நிகழ்வுகுறித்து டாக்டர். பிரசன்னா கூறியதாவது: வெற்றிகரமான இந்த உறுப்பு மாற்று சிகிச்சையினால் வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை தொடங்கும் வாய்ப்பு இந்நோயாளிக்கு கிடைத்திருக்கிறது. டெல்டா பிராந்தியத்தில் முதல்முறையாக செய்யப்பட்ட கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சையாக இது இருப்பது, இதற்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது. இப்பிராந்தியத்தை. சேர்ந்த, உள்ளூர் நோயாளிகளுக்கு, தங்கள் பகுதியிலேயே திறன்மிக்க உறுப்பு மாற்று சிகிச்சை மையம் இப்போது இருப்பது புதிய நம்பிக்கையை அவர்களுக்கு தந்திருக்கிறது.

 கிளெனீகல்ஸ்  மருத்துவமனையுடனான  எமது ஒத்துழைப்பானது இரண்டாம் நிலை நகரமான தஞ்சாவூருக்கு மேம்பட்ட உறுப்பு மாற்று சிகிச்சை நிபுணத்துவத்தை கொண்டு வந்திருப்பது மகிழ்ச்சியக்கிறது. கிளெனீகல்ஸ் மருத்துவமனையின் சிறப்பு நிபுணர்கள் எமது கல்லீரல் கிளினிக்குகளில் நிபுணத்துவ ஆலோசனைகளையும் சிகிச்சைகளையும் வழங்குவதற்காக எமது மருத்துவமனைக்கு குறித்த கால அளவுகளில் வருகை தந்திருக்கின்றனர். வெற்றிகரமான, வரலாற்று சிறப்புமிக்க இத்தருணத்தில் இச்சாதனையை இம்மருத்துவமனை நிகழ்த்துவதற்கு உதவியிருக்கிற பல்வேறு துறைகளைச் சேர்ந்த மருத்துவர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள், பரிசோதனையக நிபுணர்கள் உட்பட ஆதரவு பணியாளர்களை உள்ளடக்கிய ஒட்டுமொத்த மருத்துவ குழுவினருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன். என்ன இவ்வாறு கூறினார்.

 கிளெனீகல்ஸ் மருத்துவமனையின் டாக்டர் ஜாய் வர்கீஸ் இது குறித்து பேசுகையில்: கல்லீரல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு அதில் நிபுணத்துவம் மட்டுமின்றி நவீன மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளும் பிரத்யோகமான மருத்துவ மற்றும் ஆதரவு சேவைக் குழுவினரும் அவசியம் என்று குறிப்பிட்டார். அவர் மேலும் பேசுகையில்: தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் இத்தகைய நவீன வசதிகளும் மற்றும் திறன்மிக்க மருத்துவ குழுவினரும் இருப்பது குறித்து நாங்கள் பெருமை கொள்கிறோம். உறுப்புமாற்று சிகிச்சை போன்ற மேம்பட்ட சிகிச்சை செயல் முறைகளுக்காக பெருநகரங்களுக்கு இனிமேல் டெல்டா பிராந்தியத்தை சேர்ந்த மக்கள் பயணிக்க வேண்டியதில்லை. வெற்றிகரமாக நடைபெற்றிருக்கும் இந்த கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சையின் மூலம், தரம் மற்றும் பாதுகாப்பில் சமரசம் ஏதுமின்றி இரண்டாம் நிலை நகரில் கூட இத்தகைய சிக்கலான அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்வது முற்றிலும் சாத்தியமானது என்பதை நாங்கள் நிரூபித்திருக்கிறோம். சிகிச்சைக்காக பெருநகரங்களுக்கு பயணிப்பதற்கான அசெளகரியங்களையும், செலவுகளையும் நோயாளிகளும் மற்றும் அவர்களது குடும்பத்தினரும் இனிமேல் தவிர்க்கலாம். தரமான சிகிச்சையை தஞ்சாவூரிலேயே இனி பெற்று பயனடையலாம்" என்று கூறினார்.

- வேங்கை குணா

Comments

Popular posts from this blog

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு  திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த வெம்பாக்கம் வட்டம் குண்டியாந்தண்டல் கிராமத்தை சேர்ந்த மன்னாரு சாமி வயது 89 இவர் தினமும் காலை 7 மணி அளவில் குண்டியாந் தண்டல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம் அதுபோல் 13 11 2025 அன்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அனைவரும் அக்கம்பக்கம் தேடியதில் அதே ஊரைச் சேர்ந்த மாதவன் என்பவர் கூறியதின் பெயரில் அருகில் இருந்த காரியா மேடைக்கு அருகில் உள்ள முட்புதாரில் இறந்து கிடந்ததாகும் அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக  தூசி காவல் நிலையத்தில் புகார் பேரில் போலீசார் விசாரணை செய்தது அதில் அதே ஊரைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் தினேஷ்குமார் வயது 25 ஜன பிரகாஷ் மகன் பிரவீன் குமார் வயது 25 இருவரும் சேர்ந்து 3 கிராம் தங்கைக்காக கொலை செய்ததாக காவல் நிலையத்தில் ஒத்துக்கொண்டனர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் வெங்கடேஷ்

மாதவரம் பொன்னியம்மன்மேடு அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

சென்னை மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு கற்பகம் நகர், நாகவல்லி அவென்யூ வில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நன்பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமிஹோமம், நவக்கிரக ஹோமம், சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, உள்ளிட்ட மூன்று கால பூஜைகள் நடைபெற்று நான்காம் கால பூஜையாக யாகசாலை பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கிராம பெரியவர்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலய விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து மூலவர் உற்சவர் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.  ஸ்ரீ வர சித்தி விநாயகர் பல்வேறு வண்ண மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.  கும்பாபிஷே விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்ன...

“உன் கணவனின் விந்தில் விஷம் உள்ளது... என்னுடன் உறவு கொள்..!” - சிக்கிய ‘பலான’ போதகர்..!

  கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பெந்தகொஸ்தே சபையில் மதபோதகராக இருந்து வருபவர் ரெஜிமோன். சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக் குறைவாக இருப்பதாக சபைக்கு வந்துள்ளார். அவருக்காக ரெஜிமோன் வேண்டுதல் செய்த நிலையிலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல் ஆரோக்கியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் சபைக்கு வராதது குறித்து கேட்ட ரெஜிமோன், சரியாக சபைக்கு வரும்படி கூற அந்த பெண்ணும் சென்றுள்ளார். அப்படி அந்த பெண் செல்லும்போதெல்லாம் அவருக்கு தனியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என அழைத்து சென்ற ரெஜிமோன், உனது மார்பகம் அழகாக இருக்கிறது என்று வர்ணனை செய்து சில்மிஷ முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் “உனது கணவனின் விந்தில் விஷம் உள்ளது. அதனால்தான் உனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. நீ என்னுடன் உறவுக் கொண்டால் அதை சரிசெய்ய முடியும். எனது பரிசுத்தமான விந்து அந்த விஷத்தை போக்கும்” என்று கதைகளை அளந்து விட்டுள்ளார்.   சம்பவத்தன்று அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்து அவரை வன்கொடு...