Skip to main content

தஞ்சையில் தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில், மாநிலம் தழுவிய ஒற்றைக் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்.!

 தமிழ்நாடு அரசு பழைய ஓய்வூதியத்திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையை முன்வைத்தும், மாநிலக் கழகத்தின் சார்பாக செப்டம்பர்-5 ஆசிரியர் தினத்தில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நடப்பது போன்று, தஞ்சை முதன்மை கல்வி அலுவலர், அலுவலக வளாகம் முன்பு, நேற்றைய தினம்(5.9.2024) மாலை 5:00 - மணியளவில் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில், மாநிலம் தழுவிய ஒற்றைக் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர்,பி. இளையராஜா தலைமை தாங்கினார், மாவட்ட பொருளாளர்,கே. செந்தில்குமார் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர், கே ரவிச்சந்திரன் வரவேற்புரை ஆற்றினார், மாவட்டத் துணைத் தலைவர், எஸ்.ராஜேந்திரன் துவக்க உரையாற்றினார், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழக மாவட்டத் தலைவர்,சி. ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக, மாவட்ட பொருளாளர்,பி. முருகானந்தம், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர்,  க.மதியழகன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலச்செயலாளர், ச.கோதண்டபாணி, ஆகியோர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். மாநில துணைத் தலைவர்,ஆ.ராஜா நிறைவுரை ஆற்றினார். 

ஆர்ப்பாட்ட நிகழ்ச்சியின் நிறைவாக கும்பகோணம் கல்விமாவட்டத் தலைவர், எஸ் முருகன் நன்றியுரை ஆற்றினார். ஒற்றைக் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் பழைய பென்ஷன் திட்டத்தை  உடனடியாக அமல்படுத்த வேண்டும், உள்ளிட்ட  கோரிக்கைகளை முழக்கங்கள் வாயிலாக வெளிப்படுத்தினர்.இப்போதைய திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதி எண்,309- இல் படைய டென்ஷன் திட்டம் திரும்ப அளிக்கப்படும் என அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு நம்பிக்கை விதைத்திருந்தது மூன்றாண்டு காலமாக அதை காற்றில் பறக்கவிட்டு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மத்தியில் ஏமாற்றத்தையும், கோபத்தையும், உண்டாக்கி உள்ளது.   தமிழ்நாடு அரசு, PFRDA ல் சேராத நிலையிலும் ஒன்றிய அரசுக்கு முன்மாதிரியாக ராஜஸ்தான் பஞ்சாப் ஜார்கண்ட் சட்டிஸ்கர், இமாச்சல் கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டம் ஆசிரியர், அரசு ஊழியர்கள் நலன் கருதி,அறிவிப்பு செய்துள்ள நிலையில், தமிழகம் அறிவிப்பு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு நாம் தள்ளியாக வேண்டும் எனவும் போராட்டம் வாயிலாக தெரிவித்து உள்ளார்கள். 



செய்தியாளர் வேங்கை குணா 

தஞ்சையில் தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில், மாநிலம் தழுவிய ஒற்றைக் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்.!

Comments