தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையிலுள்ள, லிட்டில் ஸ்காலர்ஸ் மெட்ரிக்மேல்நிலைப் பள்ளியில், இந்திய பாரம்பரிய வினாடி-வினா நிகழ்ச்சி பள்ளி மாணவர்களுக்கு நடைபெற்றது. இன்டாக் ஒருங்கிணைப்பாளர் கே.சுவாமிநாதன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார், இந்திய பாரம்பரிய கலாச்சார பெருமையை பள்ளி மாணவ, மாணவிகள் அறிந்து கொள்ளும் பொருட்டு இன்டாக் சார்பாக, தேசிய அளவிலான வினாடி- வினா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மார்னிங் ஸ்டார் மெட்ரிக்ப்பள்ளி, வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பிளாசம் பப்ளிக் பள்ளி, லிட்டில்ஸ்காலர்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, லிட்டில்ஸ்காலர்ஸ் பப்ளிக் உயர்நிலைப் பள்ளியிலிருந்து சுமார்,200- மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் முதல் சுற்றில் நடைபெற்ற போட்டியில்,13.குழு மாணவர்கள் வெற்றி பெற்று, இரண்டாம் சுற்றுக்கு தேர்வு பெற்றனர்.
இறுதி சுற்றில் லிட்டில்ஸ்காலர்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், நித்தேஷ் கீர்த்திவர்மன் குழு மாநில அளவில் நடைபெறும் வினாடி- வினா நிகழ்ச்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கு இன்டாக் பொருளாளர் இராமநாதன்,செயலாளர் முத்துக்குமார், பொறியாளர் ஜெயசீலன், வழக்கறிஞர் இன்னிசை சுகுமாரன், இராசி கேட்டரிங் உரிமையாளர் இராஜகோபால், இப்பள்ளி தாளாளர் தேவிகா நடன சிகாமணி,தலைமை ஆசிரியர் ரமாதேவி, ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கிபாராட்டினர்,நிகழ்ச்சியின் நிறைவாக பொருளாளர் இராமநாதன் நன்றி உரையாற்றினார்.
செய்தியாளர் வேங்கை குணா

Comments
Post a Comment