Skip to main content

தஞ்சாவூர் மாவட்ட தனியார் பள்ளிகள் சங்கம் சார்பில் மாபெரும் ஓவியப்போட்டி.!

தஞ்சாவூர் மாவட்ட தனியார் பள்ளிகள் சங்கம் மற்றும் தஞ்சாவூர் டெல்டா ரோட்டரி சங்கம்- தஞ்சாவூர் கிரானரி ரோட்டரி சங்கம், மற்றும் தஞ்சாவூர் ஹெரிடேஜ் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்தும், மாணவர்களுக்கான மாவட்ட அளவில் மாபெரும் ஓவிய போட்டி, இளந் தூரிகை -2024" நிகழ்ச்சியானது தஞ்சை பாரத் கலை அறிவியில் கல்லூரியில், 31.8.2024அன்றைய தினம் காலை,8:00- மணியளவில் போட்டி தொடங்கியது. இந்நிகழ்ச்சிக்கு தஞ்சாவூர் மாவட்டத் தனியார் பள்ளிகள் சங்க தலைவர், ச.சித்தார்த்தன் தலைமை தாங்கினார், தஞ்சாவூர் மாவட்ட. தனியார் பள்ளிகள் சங்க செயலாளரும், ரோட்டரி உதவி ஆளுநருமாகிய, இரா. பழனியப்பன் வரவேற்புரையாற்றினார். தஞ்சாவூர் மாவட்ட தனியார் பள்ளிகள் சங்க பொருளாளர்,மு. முகமது இக்பால், இணைச்செயலாளர்,பொ.பால பாலத்தண்டாயுதபாணி, இணைச்செயலாளர் திருமதி.க.இ.கிருஷ்ணராணி, பூதலூர் ஒன்றிய செயலாளர்,ந. திருநாவுக்கரசு, திருவையாறு ஒன்றிய செயலாளர், மே.ரங்கநாதன், செயற்குழு உறுப்பினர்,ஜி.மணிக்கண்ணன், ஒரத்தநாடு ஒன்றிய தலைவர்,த.செல்வம்,திருவோணம் ஒன்றிய செயலாளர்,அ. இராமகிருஷ்ணன்,செயற்குழு உறுப்பினர்,அ. சிராஜுதீன், செயற்குழு உறுப்பினர்,மு. புகழேந்தி, செயற்குழு உறுப்பினர்,இரா. ராஜா, செயற்குழு உறுப்பினர் திருமதி. பி. உமாராணி, ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். தஞ்சை மாவட்ட தனியார் பள்ளிகள் சங்க துணைத்தலைவர்,ஆ.கருணாநிதி தொடக்க உரையாற்றினார், சிறப்பு அழைப்பாளர்களாக: மாநில தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் தலைவர்,ம. ஆறுமுகம், பாரத் கல்வி குழுமம் செயலாளர், திருமதி. புனிதா கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டுரை ஆற்றினார்கள்.

ரோட்டரி உதவி ஆளுநர், இரா. அண்ணாமலை,டெல்டா ரோட்டரி சங்க தலைவர்,த.சே.தனராஜ், கிரானரி ரோட்டரி சங்க தலைவர்,சிங். இரா.அன்பழகன், ஹெரிடேஜ் ரோட்டரி சங்க தலைவர்,க.இரகு ஆகியோர்கள் கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டு,இளந் தூரிகை-2024 போட்டியில்  வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்கள், நடைபெற்ற ஓவிய போட்டியில், தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த 52- பள்ளிகளிலிருந்து, ஒன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை உள்ள 860-மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர், இந்தஓவிய போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற,130-மாணவ, மாணவியருக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டு பாராட்டப்பட்டது. இதில் தாளாளர்கள், நிர்வாகிகள், தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நடைபெற்ற நிகழ்ச்சிகளை துணைத் தலைவர்,லூ.லாரன்ஸ் தொகுத்து வழங்கினார்,நிகழ்ச்சியின் நிறைவாக செயற்குழு உறுப்பினர்,திருமதி. க.மகாலெட்சுமி நன்றி கூறினார்.



செய்தியாளர் வேங்கை குணா 

Comments

Popular posts from this blog

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு  திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த வெம்பாக்கம் வட்டம் குண்டியாந்தண்டல் கிராமத்தை சேர்ந்த மன்னாரு சாமி வயது 89 இவர் தினமும் காலை 7 மணி அளவில் குண்டியாந் தண்டல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம் அதுபோல் 13 11 2025 அன்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அனைவரும் அக்கம்பக்கம் தேடியதில் அதே ஊரைச் சேர்ந்த மாதவன் என்பவர் கூறியதின் பெயரில் அருகில் இருந்த காரியா மேடைக்கு அருகில் உள்ள முட்புதாரில் இறந்து கிடந்ததாகும் அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக  தூசி காவல் நிலையத்தில் புகார் பேரில் போலீசார் விசாரணை செய்தது அதில் அதே ஊரைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் தினேஷ்குமார் வயது 25 ஜன பிரகாஷ் மகன் பிரவீன் குமார் வயது 25 இருவரும் சேர்ந்து 3 கிராம் தங்கைக்காக கொலை செய்ததாக காவல் நிலையத்தில் ஒத்துக்கொண்டனர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் வெங்கடேஷ்

மாதவரம் பொன்னியம்மன்மேடு அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

சென்னை மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு கற்பகம் நகர், நாகவல்லி அவென்யூ வில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நன்பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமிஹோமம், நவக்கிரக ஹோமம், சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, உள்ளிட்ட மூன்று கால பூஜைகள் நடைபெற்று நான்காம் கால பூஜையாக யாகசாலை பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கிராம பெரியவர்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலய விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து மூலவர் உற்சவர் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.  ஸ்ரீ வர சித்தி விநாயகர் பல்வேறு வண்ண மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.  கும்பாபிஷே விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்ன...

“உன் கணவனின் விந்தில் விஷம் உள்ளது... என்னுடன் உறவு கொள்..!” - சிக்கிய ‘பலான’ போதகர்..!

  கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பெந்தகொஸ்தே சபையில் மதபோதகராக இருந்து வருபவர் ரெஜிமோன். சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக் குறைவாக இருப்பதாக சபைக்கு வந்துள்ளார். அவருக்காக ரெஜிமோன் வேண்டுதல் செய்த நிலையிலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல் ஆரோக்கியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் சபைக்கு வராதது குறித்து கேட்ட ரெஜிமோன், சரியாக சபைக்கு வரும்படி கூற அந்த பெண்ணும் சென்றுள்ளார். அப்படி அந்த பெண் செல்லும்போதெல்லாம் அவருக்கு தனியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என அழைத்து சென்ற ரெஜிமோன், உனது மார்பகம் அழகாக இருக்கிறது என்று வர்ணனை செய்து சில்மிஷ முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் “உனது கணவனின் விந்தில் விஷம் உள்ளது. அதனால்தான் உனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. நீ என்னுடன் உறவுக் கொண்டால் அதை சரிசெய்ய முடியும். எனது பரிசுத்தமான விந்து அந்த விஷத்தை போக்கும்” என்று கதைகளை அளந்து விட்டுள்ளார்.   சம்பவத்தன்று அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்து அவரை வன்கொடு...