Skip to main content

இந்துஸ்தான் நிகர்நிலை பல்கலை கழகத்தின் சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் காயார் அரசு நடுநிலைப் பள்ளியில் நடைப்பெற்றது

இந்துஸ்தான் நிகர்நிலை பல்கலை கழகத்தின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக கடந்த 24 ஆகஸ்ட் முதல் ஆகஸ்ட் 31 வரை சிறப்பு நாட்டு நலப்பணித் திட்ட முகாம் காயார் அரசு நடுநிலைப் பள்ளியில் நடைப்பெற்றது. 

இம்முகாமினை திரு. S. N., ஸ்ரீதரா, துணை வேந்தர், திரு. முத்துக்குமார் சுப்பிரமணியம், பதிவாளர், மற்றும் திரு. ரமேஷ், காயார் ஊராட்சி தலைவர் துவக்கி வைத்தனர். இம்முகாமில் கண் மருத்துவ முகாம்( பம்மல் சங்கரா மருத்துவமனை ), பல் மருத்துவ முகாம்( ராகாஸ் மருத்துவமனை ), கால்நடை மருத்துவ முகாம்( அரசு மருத்துவமனை), மற்றும் பொது மருத்துவ முகாம் ( சத்யசாய் மருத்துவமனை ) ஆகியவை நடைபெற்றது. மேலும் இம்முகாமில்  சுவர்களுக்கு வண்ணம் அடித்தல், பள்ளி வளாகத்தை தூய்மை படுத்தும் பணியும் நடை பெற்றது. காயார், இள்ளலூர், மற்றும் வெண்பேடு அரசு பள்ளிகளில் தூய்மை இந்தியா என்கிற தலைப்பில் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கபட்டது. 50 மாணவர்கள் இம்முகாமினில் கலந்து கொண்டனர். இம்முகாமினை முனைவர். திரு. க. ஞானசேகரன், நாட்டு நல்லபணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஏற்பாடு செய்திருந்தார்.


செய்தியாளர் மூர்த்தி 

Comments