வேலூர் மாவட்டம் காட்பாடியில் திமுக சார்பில் அண்ணாவின் 54 வது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.மறைந்த முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாதுரையின் 54வது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.
அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு வேலூர் மாநகராட்சி காட்பாடி 1வது மண்டல குழு அலுவலகம் அருகில் இருந்து வேலூர் தொகுதி எம்பி டி.எம்.கதிர்ஆனந்த், வேலூர் மாநகர துணை மேயரும், காட்பாடி தெற்கு பகுதி கழக செயலாளருமான எம். சுனில் குமார், காட்பாடி வடக்கு பகுதி செயலாளர் வன்னிய ராஜா, காட்பாடி 1வது மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னிய ராஜா, காந்திநகர் பகுதி செயலாளர் பரமசிவம் ஆகியோர் தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டு சித்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலையை அடைந்தனர். இந்த மௌன ஊர்வலத்துக்கு பிறகு மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணா சிலைக்கு வேலூர் தொகுதி எம்பி டி. எம். கதிர்ஆனந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து அனைவரும் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர் இதை இந்த அண்ணா நினைவு நாள் நிகழ்ச்சியில் வேலூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் அன்பு, ரீட்டா சரவணன், சீனுவாசன், சித்ரா மகேந்திரன், சித்ரா லோகநாதன், பொறியாளர் அணி ஜெகதீசன், மகளிரணி விஜயகுமாரி, கேபிள் சீனுவாசன் மற்றும் பல அணிகளை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். அண்ணா நினைவு நாள் நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் காட்பாடி வடக்கு பகுதி செயலாளர் வன்னியராஜா சிறப்பாக செய்திருந்தார்.
செய்தியாளர் வாசுதேவன்

Comments
Post a Comment