வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், ஒடுகத்தூர் உள்வட்டம், ஒடுகத்தூர் கிராமத்தில் பெருமாள் என்பவர் போலி மருத்துவர் என புகார்கள் வந்தன.
இதையடுத்து, அணைக்கட்டு வட்டாட்சியரின் தலைமையில் பெருமாள் என்பவர் யுவராஜ் கிளினிக் என்ற பெயரில் நடத்தி வந்த மருத்துவமனையில் திடீர் விசாரணையை மருத்துவ துறையினர் மேற்கொண்டனர். விசாரணையில் பொதுமக்களுக்கு காயம், காய்ச்சல் போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், சுமார் 2 வருடமாக கிளினிக் நடத்தி வருவதாகவும் பெருமாள் தெரிவித்தார். மேலும் ஸ்டெதாஸ்கோப், ரத்த அழுத்தம் பரிசோதனை கருவி, ஆங்கில மருந்து, மாத்திரைகள் மற்றும் மருந்து செலுத்தும் ஊசிகள் அங்கிருந்து கைப்பற்றப்பட்டன. மேலும் யுவராஜ் கிளினிக் மூடி சீல் வைக்கப்பட்டது. இந்த அதிரடி சோதனை நிகழ்வில் மண்டல துணை வட்டாட்சியர், ஒடுகத்தூர் உள்வட்ட வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர்கள் மற்றும் ஒடுகத்தூர் சுகாதார நிலைய ஆய்வாளர் ஆகியோர் உடனிருந்தனர். இது குறித்து வட்டார மருத்துவ அலுவலருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுபோன்ற போலி மருத்துவர்கள் ஒடுகத்தூரில் இன்னமும் இருவர் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்தியாளர் : வாசுதேவன்

Comments
Post a Comment