Skip to main content

மதுரை நேருநகர் ஸ்ரீகாளியம்மன் திருக்கோவில் நடைபெற்ற திருவிளக்குபூஜை.

மதுரை பைபாஸ் ரோடு நேருநகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீகாளியம்மன் திருக்கோவில் 22ம் ஆண்டு உற்சவ விழா கடந்த 30.1.2023 அன்று கணபதி ஹோமத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவை முன்னிட்டு பெண்களின் கும்மிபாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.


விழாவின் முக்கிய நிகழ்வான உலக நன்மை வேண்டியும் விவசாயம் செழிக்கவும்  திருவிளக்கு பூஜை 70 வது வட்ட மாமன்ற உறுப்பினர் அமுதா தவமணி தலைமையில் நடைபெற்றது. இத்திருவிளக்குபூஜையில் சுற்றுப்புற பகுதி பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கேற்றி அம்மனை வழிபட்டனர்.

தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுவிக்ஷே தீபராதனைகள் நடைபெற்றது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை தலைவர் ஜெயப்பிரகாஷ், செயலாளர் மணிவண்ணன், பொருளாளர் மாரியப்பன் தலைமையில் விழாக்குழுவினர் சிறப்பாக செய்து இருந்தனர்.

செய்தியாளர் : செந்தில் கணேஷ்

Comments