திருவண்ணாமலை ஈசானிய லிங்கம் அருகே உள்ள யாத்திரி நிவாஸ் பக்தர்கள் தங்கும் விடுதியில் ஐ.ஏ.எஸ் அதிகாரி என நடித்து கட்டப்பஞ்சாயத்து செய்த போலி ஐ.ஏ.எஸ் அதிகாரியை திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை சேர்ந்தவர் சுபாஷ். இவர் ஐ.ஏ.எஸ் அதிகாரியான தெரிவித்து பல்வேறு இடங்களில் மோசடியில் ஈடுபட்டுள்ளார். போலி ஐ.ஏ.எஸ் அதிகாரியான சுபாஷ் நேற்று மாலை திருவண்ணாமலைக்கு வந்து ஈசான லிங்கம் அருகே உள்ள பக்தர்கள் தங்கும் விடுதியான யாத்திரி நிவாஸ் விடுதியில் தங்கி உள்ளார்.
யாத்ரி நிவாஸ் விடுதியில் தங்கிய போலி ஐ.ஏ.எஸ் அதிகாரியான சுபாஷ் ஒரு தம்பதியிடம் பிரச்சனைகள் குறித்து பேசி பிரச்சனைகளை முடித்து தருவதாக கட்டப்பஞ்சாயத்து பேசி உள்ளார். அப்போது அந்த தம்பதியுடன் இருந்த ஒரு நபர் சுபாஷ் மீது சந்தேகம் கொண்டு காவல் துறை எண்ணான 100க்கு தொலைக்காட்சியில் தகவல் அளித்துள்ளார்.
தொலைபேசி வாயிலாக தகவலை அறிந்த திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீசார் யாத்திரி நிவாஸ் விடுதிக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது சுபாஷ் ஐ.ஏ.எஸ் அதிகாரி இல்லை என தெரியவந்ததையடுத்து அவரை கிழக்கு காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் தற்போது விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணை முடிந்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கிழக்கு காவல் நிலைய போலீசார் தகவல்கள் தெரிவித்தனர்.
போலி ஐ.ஏ.எஸ் அதிகாரியான சுபாஷ் மீது கேரளா, சென்னை, மதுரவாயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரசு பதவியை தவறாக பயன்படுத்தியாகவும், அரசு முத்திரைகளை பயன்படுத்துகிறார் எனவும் வழக்கு பதிவுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் மூர்த்தி

Comments
Post a Comment