சென்னை மாநகர காவல் ஆணையரின் உத்திரவின் பேரில் ரவுடி ஒழிப்பு சிறப்பு தனிப்படை மேற்கு மண்டல காவல் ஆய்வாளர் பார்த்திபன் தலைமையில் சென்னையில் உள்ள தலைமறைவு ரவுடிகளை வேட்டையாடி பிடித்து அவர்களை கைது செய்து வருகின்றனர்.
அதன்படி அம்பத்தூர் அயப்பாக்கத்தை சேர்ந்த சதீஷ் (எ) சதீஷ்குமார் (என்ற )கோண சதீஷ் வயது 29 என்ற தலைமறைவு ரவுடி பொறி வைத்து பிடித்தனர்.
இவர் மீது ஓட்டேரி செம்பியம் கொடுங்கையூர் மாதவரம் திருவேற்காடு ஆகிய பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் கொலை வழக்குகள் உள்ளது. இவர் பிரபல ரவுடி அகரம் கதிர் என்பவனின் கூட்டாளி ஆவார் நடந்து முடிந்த கொலைகளுக்கு இவர் மூளையாக செயல்பட்டவர் எனவும் இவரை முதல் முறையாக சிறப்பு தனிப்படை போலீசார் கைது செய்வது குறிப்பிடத்தக்கது.
பிரபல ரவுடியான சேர்த்து சென்னை புறநகர் பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்துக்கள் அடிதடி வழக்குகள் போன்றவற்றில் தலைமறைவாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இவரை பெரம்பலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அகரம் பகுதியில் அவரது கூடாடாளி அணில் எ சதீஷ் வயது 26 மாது வயது 26 தணிகாசலம் வயது 20 ஆகியோருடன் பதுங்கி இருந்த அவரை மிகவும் லாவகமாக பிடித்த தனிப்படை போலீசாரை போலீஸ் உயரதிகாரிகள் வெகுவாக பாராட்டினார்கள்

.jpeg)
Comments
Post a Comment