“எங்கள் முதல்வர் எங்கள் பெருமை” முதல்வரின்வாழ்க்கைப் பயணம் குறித்த புகைப்பட கண்காட்சி - நேரில் சென்று பார்த்துப் பயனடைந்த அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவியர்
மாண்புமிகு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு, இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்களால் “எங்கள் முதல்வர் எங்கள் பெருமை” என்ற தலைப்பில் முதல்வரின் 70 ஆண்டுகால வாழ்க்கைப் பயணம் குறித்த புகைப்படக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இக்கண்காட்சியை இந்துசமய அறநிலையத்துறையின் கீழ், சென்னை கொளத்தூரில் இயங்கிவரும் கல்லூரியான, அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் செயலாளர், கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், கல்லூரி மாணவ மாணவிகள் உள்ளிட்ட அனைவரும் நேரில் சென்று பார்த்துப் பயனடைந்தனர்.




Comments
Post a Comment