காட்பாடி இருப்புப் பாதை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காட்பாடி நடைமேடை எண் 2ல் காஞ்சனா( 44) க/பெ செந்தில்குமார், சைதாப்பேட்டை, வேலூர் என்பவர் பெங்களூருவில் இருந்து டெல்லி செல்லும் விரைவு வண்டி ரயில் முன் திடீரென பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
காஞ்சனாவின் மகன் ஆனந்தன் கடந்த சனிக்கிழமை சாலை விபத்தில் திருச்சியில் இறந்துள்ளார். இந்நிலையில் ஈம காரியங்கள் செய்த நிலையில் மனம் உடைந்து காணப்பட்டார். இதற்கிடையில் காஞ்சனா வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியாமல் காட்பாடி ரயில் நிலையத்துக்கு வந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என புலன் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இறந்த காஞ்சனாவின் உடல் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.காட்பாடி இருப்பு பாதை காவல் நிலைய ஆய்வாளர் சித்ரா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
செய்தியாளர் வாசுதேவன்

Comments
Post a Comment