வேலூர் மாவட்டம், காட்பாடி கிளித்தான்பட்டறையில் 5வது வட்ட திமுக சார்பில் தமிழக முதல்வரின் 70 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திமுக கொடி ஏற்றி, இனிப்பு வழங்கி அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளுக்கு தேவையான அனைத்து அத்தியாவசியப்பொருள்களையும் 5வது வட்ட செயலாளர் விநாயகம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் காட்பாடி வடக்கு பகுதி செயலாளர் வன்னியராஜா மற்றும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது .இதை தொடர்ந்து மதியம் அனைவருக்கும் அறுசுவை விருந்தும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் வாசுதேவன்

Comments
Post a Comment