மதுரை மணி நகரம் மேலத்தெரு அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் 145 ஆம் ஆண்டு உற்சவ விழா கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கி விமர்சையாக நடைபெற்று வருகிறது.
உற்சவ விழாவின் முக்கிய நிகழ்வாக பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. உற்சவ விழாவை முன்னிட்டு அம்மனுக்கு விசேஷ அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளும் தீபாரதனைகளும் நடைபெற்றன. நிகழ்ச்சி ஏற்ப்பாடுகளை தலைவர் சம்பத்குமார், செயலாளர் முருகன், பொருளாளர் ஜீவா தலைமையில் விழா கமிட்டியினர் சிறப்பாக செய்திருந்தனர்.
செய்தியாளர் செந்தில் கணேஷ்

Comments
Post a Comment