Skip to main content

புழல் மத்திய சிறையில் மேம்படுத்தப்பட்ட வழக்கறிஞர்கள், பார்வையாளர்கள் நேர்காணல் அறையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் சிறைத்துறை அமைச்சர்

புழல் மத்திய சிறையில் மேம்படுத்தப்பட்ட வழக்கறிஞர்கள், பார்வையாளர்கள் நேர்காணல் அறையை சிறைத்துறை அமைச்சர் ரகுபதி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் பார்வையாளர்களுக்கு பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி சிறையில் இருந்த போது எந்தவித சிறப்பு வசதிகள் செய்து தரப்படவில்லை. அமைச்சர் ரகுபதி பேட்டி.

சென்னை புழல் மத்திய சிறையில் விசாரணை தண்டனை மகளிர் என மூன்று பிரிவுகளில் சுமார் 4000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறை கைதிகள் தங்களது உறவினர்களை சிறைக்குள் சந்திப்பதற்கான பிரத்தியேக அறையும், வழக்கறிஞர்கள் தங்களது கட்சிக்காரர்களை சந்திப்பதற்கான பார்வையாளர் அறையை மேம்படுத்துமாறு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. கைதிகளின் உறவினர்களும் வழக்கறிஞர்களும் கைதிகளை சந்திப்பதற்கு முந்தைய தினமே புழல் சிறை சார்பில் அளிக்கப்பட்டுள்ள பிரத்தியேக எண்ணில் முன்பதிவு செய்து கொண்டால் மறுநாள் அவர்களுக்கான நேரம் ஒதுக்கப்படும். குறிப்பிட்ட நேரத்தில் வந்தால் கால விரயம் இன்றி பார்வையாளர்களும் வழக்கறிஞர்களும் சிறை கைதிகளை சந்திப்பதற்கான பிரத்தியேக ஏற்பாடுகள் தனித்தனி அறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் புழல் மத்திய சிறையில் மேம்படுத்தப்பட்ட வழக்கறிஞர்கள், பார்வையாளர்கள் நேர்காணல் அறையை சிறைத்துறை அமைச்சர் ரகுபதி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். உடன் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் எஸ்.சுதர்சனம் உள்ளிட்ட சிறைத்துறை அதிகாரிகள் இருந்தனர்.

அதனை தொடர்ந்து புழல் சிறையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி, உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் பார்வையாளர்கள் அறை மேம்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். வாரம் இருமுறை, நாளொன்றுக்கு ஒரு கைதி 30நிமிடங்கள் என்ற அடிப்படையில் 56பேர் 3ஷிப்ட் முறையில் ஒரே நாளில் 728 சிறைவாசிகள் தங்களது உறவினர்களை சந்திக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் ஒரே நேரத்தில் 50 வழக்கறிஞர்கள் தனிப்பட்ட முறையில் சிறைவாசிகளை சந்திப்பதற்கு பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார். இதற்கு முன்பாக வழக்கறிஞர்கள் மாலை 3 முதல் 5 மணி வரை மட்டுமே சிறை கைதிகளை சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது வார நாட்களில் காலை 11 முதல் மாலை 5 மணி வரையும், சனிக்கிழமைகளில் காலை 10 முதல் பகல் ஒரு மணி வரை மட்டுமே இருந்ததை தற்போது, திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை என வழக்கறிஞர்களின் நேரத்திற்கு ஏற்ப கைதிகளை சந்தித்து பேசுவதற்கான பிரத்தியேக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். முன்கூட்டியே பதிவு செய்வதால் ஒதுக்கப்பட்ட நேரத்தில் சிறைவாசிகள் பார்வையாளர் அறைக்கு வரவழைக்கப்படுவதாகவும் இதனால் கால விரயம் தவிர்க்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். மேலும் சிறைச்சாலைக்கு வரும் கைதிகளின் உறவினர்கள் வழக்கறிஞர்களுக்கு என பார்வையாளர் அறைகளில் கழிப்பறை வசதிகளும் முறையாக ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். பிரத்தியேக பார்வையாளர் அறை என்பது தமிழக சிறைத்துறை வரலாற்று புதிய மயில்களாக அமையும் எனவும் அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். சிறைவாசிகளுக்கு கடந்த ஆண்டு முதல் தரமான உணவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தற்போது வரை சிறைக்குள் வழங்கும் உணவு குறித்து எந்த சிறைவாசியும் புகார் தெரிவிக்கவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார். பார்வையாளர்கள் வழக்கறிஞர்களுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து செய்தியாளர்களை நேரடியாக அழைத்துச் சென்று காண்பித்துள்ளதாகவும் இதில் எந்தவித ஒளிவு மறைவிற்கு இடமில்லை எனவும் அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். சிறைக்குள் கைதிகளுக்கு பிரத்தியேகமாக தொழிற் பயிற்சி வழங்கப்பட்டு வரும் நிலையில் குறிப்பிட்ட தொழில்பயிற்சி வேண்டும் என கைதிகள் கோரிக்கை வைக்கும் பட்சத்தில் அது குறித்து ஆய்வு செய்து அவர்களுக்கு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

கைதிகள் பார்வையாளர்கள் தொடர்பு கொள்வதற்காக செய்யப்பட்டுள்ள இன்டர்காம் தொலைபேசியில் சிறைத்துறை எந்தவித ஒட்டுக்கேட்பு செயலிலும் ஈடுபடவில்லை எனவும் அது குறித்து யாரேனும் சந்தேகம் தெரிவித்தால் அதனை ஆய்வு செய்வதற்கு அந்த இன்ட்ரகாம் தொலைபேசிகளை வழங்கவும் தயாராக இருப்பதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். செந்தில் பாலாஜி சிறையில் இருந்த போது மற்ற சிறைவாசிகளுக்கு வழங்கப்பட்ட நடைமுறையே இவருக்கும் கடைபிடிக்கப்பட்டது எனவும், எந்தவிதமான சிறப்பு வசதிகளையும் கோரவில்லை எனவும், தனிப்பட்ட உணவையும் கேட்கவில்லை என்றும், சிறையில் கொடுக்கப்பட்ட உணவை தான் அவர் சாப்பிட்டார் என்றும், தனி அறை கேட்கவில்லை, சுகமாகவும் இருக்கவில்லை, சாதாரண சிறைவாசி போலவே இருந்தார் எனவும், அவருடன் சிறையில் இருந்தவர்களை கேட்டுப்பாருங்கள் என் அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

- செய்தியாளர் ரஞ்சித்

Comments

Popular posts from this blog

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு  திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த வெம்பாக்கம் வட்டம் குண்டியாந்தண்டல் கிராமத்தை சேர்ந்த மன்னாரு சாமி வயது 89 இவர் தினமும் காலை 7 மணி அளவில் குண்டியாந் தண்டல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம் அதுபோல் 13 11 2025 அன்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அனைவரும் அக்கம்பக்கம் தேடியதில் அதே ஊரைச் சேர்ந்த மாதவன் என்பவர் கூறியதின் பெயரில் அருகில் இருந்த காரியா மேடைக்கு அருகில் உள்ள முட்புதாரில் இறந்து கிடந்ததாகும் அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக  தூசி காவல் நிலையத்தில் புகார் பேரில் போலீசார் விசாரணை செய்தது அதில் அதே ஊரைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் தினேஷ்குமார் வயது 25 ஜன பிரகாஷ் மகன் பிரவீன் குமார் வயது 25 இருவரும் சேர்ந்து 3 கிராம் தங்கைக்காக கொலை செய்ததாக காவல் நிலையத்தில் ஒத்துக்கொண்டனர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் வெங்கடேஷ்

மாதவரம் பொன்னியம்மன்மேடு அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

சென்னை மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு கற்பகம் நகர், நாகவல்லி அவென்யூ வில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நன்பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமிஹோமம், நவக்கிரக ஹோமம், சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, உள்ளிட்ட மூன்று கால பூஜைகள் நடைபெற்று நான்காம் கால பூஜையாக யாகசாலை பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கிராம பெரியவர்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலய விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து மூலவர் உற்சவர் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.  ஸ்ரீ வர சித்தி விநாயகர் பல்வேறு வண்ண மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.  கும்பாபிஷே விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்ன...

“உன் கணவனின் விந்தில் விஷம் உள்ளது... என்னுடன் உறவு கொள்..!” - சிக்கிய ‘பலான’ போதகர்..!

  கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பெந்தகொஸ்தே சபையில் மதபோதகராக இருந்து வருபவர் ரெஜிமோன். சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக் குறைவாக இருப்பதாக சபைக்கு வந்துள்ளார். அவருக்காக ரெஜிமோன் வேண்டுதல் செய்த நிலையிலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல் ஆரோக்கியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் சபைக்கு வராதது குறித்து கேட்ட ரெஜிமோன், சரியாக சபைக்கு வரும்படி கூற அந்த பெண்ணும் சென்றுள்ளார். அப்படி அந்த பெண் செல்லும்போதெல்லாம் அவருக்கு தனியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என அழைத்து சென்ற ரெஜிமோன், உனது மார்பகம் அழகாக இருக்கிறது என்று வர்ணனை செய்து சில்மிஷ முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் “உனது கணவனின் விந்தில் விஷம் உள்ளது. அதனால்தான் உனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. நீ என்னுடன் உறவுக் கொண்டால் அதை சரிசெய்ய முடியும். எனது பரிசுத்தமான விந்து அந்த விஷத்தை போக்கும்” என்று கதைகளை அளந்து விட்டுள்ளார்.   சம்பவத்தன்று அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்து அவரை வன்கொடு...