Skip to main content

பத்திரிகையாளர்கள் சங்கம் என்ற போர்வையில் எல்எல்பி, பள்ளி, கல்லூரி ஆவணம் தயாரித்து லட்சக்கணக்கில் சுருட்டல்

 பத்திரிகையாளர் சங்கம் என்ற போர்வையில் பள்ளி, கல்லூரிகளுக்கான போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்தும் எல்எல்பி பட்டம் வாங்கி கொடுத்தும் பல லட்சம் மோசடியில் ஈடுபட்ட டுபாக்கூர் ஆசாமிகள் 2 பேரை கைது செய்தனர். 


இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் பல மோசடிகள் அம்பலமாகி உள்ளது. வடசென்னை பகுதியில் பெரும்பாலான வாகனங்களில் பிரஸ் ஸ்டிக்கரை ஒட்டிக்கொண்டு சென்றவர்களை போலீசார் பிடித்து விசாரித்தபோது அவர்கள் போலி பத்திரிகையாளர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து நுண்ணறிவு பிரிவு போலீசார் வடசென்னையில் செயல்பட்டுவரும் பத்திரிகையாளர் சங்கங்கள், மாத பத்திரிகைகளை ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில், வில்லிவாக்கத்தில் ஒரு பத்திரிகையாளர் சங்கத்தில் எந்த சான்றிதழ் கேட்டாலும் தயார் செய்து கொடுப்பதாகவும் ஒவ்வொரு சான்றிதழுக்கும் குறிப்பிட்ட தொகை நிர்ணயித்து வசூல் செய்வதாகவும் ராஜமங்கலம் போலீசாருக்கு தெரியவந்தது. வக்கீல்கள் என்ற பெயரில் கட்ட பஞ்சாயத்து நடப்பதாகவும் தெரியவந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் மூர்த்தி தலைமையிலான போலீசார், 13வது நீதிமன்ற நடுவர் தர்மபிரபுவுக்கு தகவல் தெரிவித்ததுடன் அவரது அனுமதி பெற்று வில்லிவாக்கம் பாலாம்பிகை நகர் பகுதியில் உள்ள யுனிவர்செல் பத்திரிகை ஊடக சங்க அலுவலகத்தில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு பள்ளி, கல்லூரிகள் வழங்கும் சான்றிதழ்கள் போலியாக அச்சடித்து கொடுத்ததற்கான ஆவணங்கள், பல்வேறு இடத்திற்கான ஆவணங்கள் மற்றும் ஆந்திராவில் எல்எல்பி படிப்பிற்கான ஆவணங்கள் என்று போலி ஆவணங்கள் ஏராளமான இருந்தன. அங்கிருந்து லேப்டாப், இரண்டு செல்போன்கள், பென்டிரைவ், டிவிஆர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் யுனிவர்செல் பத்திரிகை ஊடக சங்கத்தை நடத்திவந்த விநாயகபுரம் பத்மாவதி நகர் பகுதியை சேர்ந்த விஜய் ஆனந்த் (47), பொருளாளராக செயல்பட்ட ஆவடி மெஜஸ்டிக் நகர் பகுதியை சேர்ந்த ரூபன் ஜெர்மையா (42) ஆகியோரை கைது செய்து இருவரையும் காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் போலி ஆவணங்களை தயாரித்து வில்லிவாக்கம், பெரம்பூர் ஆகிய இடங்களில் உள்ள ஜெராக்ஸ் கடையில் ஜெராக்ஸ் எடுத்து விற்பனை செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் எங்கெங்கு காலி பணியிடங்கள் உள்ளதோ அதனை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரிந்துகொண்டு குறிப்பிட்ட அந்த வேலைகளுக்கு வேலை வாங்கி தருவதாக போலி ஆவணங்களை தயாரித்து விற்பனை செய்துள்ளனர். 10, 12ம் வகுப்பு சான்றிதழ்கள் மற்றும் ஆந்திராவில் எல்எல்பி படிப்பு முடித்தது போன்ற சான்றிதழ் என பல்வேறு சான்றிதழ்களை தயாரித்து விற்பனை செய்துள்ளனர். பெரிய பல்கலைக்கழகங்களின் லோகோ முத்திரைகளை பயன்படுத்தி பி.எச்.டி சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களை வழங்கியுள்ளனர்.

இதில், ரூபன் ஜெர்மையா தன்னை வழக்கறிஞர் என்று பொய் கூறியுள்ளார். விஜய் ஆனந்த் எல்எல்பி படித்து முடித்துவிட்டதாக ஏமாற்றியுள்ளதாக தெரிகிறது. யுனிவர்செல் பத்திரிகை ஊடக சங்க பெயரை வைத்து மாதந்தோறும் மாத பத்திரிக்கை ஒன்று நடத்தி ஏராளமானவர்களை பத்திரிகையாளர்கள், புகைப்பட கலைஞர்கள் எனக்கூறி பிரஸ் என்ற அடையாள அட்டையை கொடுத்துள்ளதும் தெரியவந்துள்ளது. இதற்காக இவர்கள் 3 ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை வசூலித்துள்ளனர். போலி சான்றிதழ்கள் கேட்டு வரும் நபர்களிடம் 10 ஆயிரம் முதல் லட்சக்கணக்கில் பணம் வசூலித்துள்ளனர். இவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை வைத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் 2 பேருக்கு மட்டும்தான் தொடர்பு உள்ளதா வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்றும் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

Comments

Popular posts from this blog

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு  திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த வெம்பாக்கம் வட்டம் குண்டியாந்தண்டல் கிராமத்தை சேர்ந்த மன்னாரு சாமி வயது 89 இவர் தினமும் காலை 7 மணி அளவில் குண்டியாந் தண்டல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம் அதுபோல் 13 11 2025 அன்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அனைவரும் அக்கம்பக்கம் தேடியதில் அதே ஊரைச் சேர்ந்த மாதவன் என்பவர் கூறியதின் பெயரில் அருகில் இருந்த காரியா மேடைக்கு அருகில் உள்ள முட்புதாரில் இறந்து கிடந்ததாகும் அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக  தூசி காவல் நிலையத்தில் புகார் பேரில் போலீசார் விசாரணை செய்தது அதில் அதே ஊரைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் தினேஷ்குமார் வயது 25 ஜன பிரகாஷ் மகன் பிரவீன் குமார் வயது 25 இருவரும் சேர்ந்து 3 கிராம் தங்கைக்காக கொலை செய்ததாக காவல் நிலையத்தில் ஒத்துக்கொண்டனர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் வெங்கடேஷ்

மாதவரம் பொன்னியம்மன்மேடு அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

சென்னை மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு கற்பகம் நகர், நாகவல்லி அவென்யூ வில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நன்பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமிஹோமம், நவக்கிரக ஹோமம், சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, உள்ளிட்ட மூன்று கால பூஜைகள் நடைபெற்று நான்காம் கால பூஜையாக யாகசாலை பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கிராம பெரியவர்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலய விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து மூலவர் உற்சவர் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.  ஸ்ரீ வர சித்தி விநாயகர் பல்வேறு வண்ண மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.  கும்பாபிஷே விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்ன...

“உன் கணவனின் விந்தில் விஷம் உள்ளது... என்னுடன் உறவு கொள்..!” - சிக்கிய ‘பலான’ போதகர்..!

  கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பெந்தகொஸ்தே சபையில் மதபோதகராக இருந்து வருபவர் ரெஜிமோன். சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக் குறைவாக இருப்பதாக சபைக்கு வந்துள்ளார். அவருக்காக ரெஜிமோன் வேண்டுதல் செய்த நிலையிலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல் ஆரோக்கியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் சபைக்கு வராதது குறித்து கேட்ட ரெஜிமோன், சரியாக சபைக்கு வரும்படி கூற அந்த பெண்ணும் சென்றுள்ளார். அப்படி அந்த பெண் செல்லும்போதெல்லாம் அவருக்கு தனியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என அழைத்து சென்ற ரெஜிமோன், உனது மார்பகம் அழகாக இருக்கிறது என்று வர்ணனை செய்து சில்மிஷ முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் “உனது கணவனின் விந்தில் விஷம் உள்ளது. அதனால்தான் உனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. நீ என்னுடன் உறவுக் கொண்டால் அதை சரிசெய்ய முடியும். எனது பரிசுத்தமான விந்து அந்த விஷத்தை போக்கும்” என்று கதைகளை அளந்து விட்டுள்ளார்.   சம்பவத்தன்று அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்து அவரை வன்கொடு...