Skip to main content

நண்பனை கொலைச்செய்து துரோகியாக மாறிய விசிக சீனுவளவன்.. குற்ற உறுத்தல் காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகேயுள்ள கல்யாணபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுதாகர். இவரது மனைவி ரம்யா. இவர்களுக்கு இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில், ஆரணி அடுத்துள்ள பையூர் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவருடன் ரம்யாவுக்குத் திருமணம் மீறிய தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. கணவருக்குத் தெரியாமல், பெருமாளை அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்திருக்கிறார் ரம்யா. மனைவி ரம்யாவின் நடத்தையில் சுதாகருக்குச் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. மனைவியின் தவறான தொடர்பு தெரியவந்ததால், கடும் மனஉளைச்சலுக்கு ஆளான சுதாகர், கோழிப்புலியூர் கிராமத்தில் வசிக்கும் தனது நண்பன் சீனுவளவனைச் சந்தித்து, தனது மனைவியின் நடத்தை விவகாரம் குறித்துக் கூறி வேதனைப்பட்டிருக்கிறார்.

சீனுவளவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பெரணமல்லூர் கிழக்கு ஒன்றியச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்தார். நண்பன் சுதாகரை சமாதானப்படுத்திய வி.சி.க நிர்வாகி சீனுவளவன், அவரது மனைவியுடன் திருமணம் மீறிய தொடர்பிலுள்ள பெருமாளை கண்டிப்பதற்காகச் சென்றுள்ளார். ஆனால், என்ன நடந்ததோ தெரியவில்லை. திடீரென ரம்யா மீது சீனுவளவனுக்கு அக்கறை ஏற்பட்டது. ரம்யா சொல்படி கேட்க ஆரம்பித்த சீனுவளவன், முடிவில் நண்பன் சுதாகருக்கே துரோகியாகவும் மாறிவிட்டாராம் சீனுவளவன்.

இதையடுத்து, இடையூறாக உள்ள தனது கணவன் சுதாகரைத் தீர்த்துகட்டும் முடிவுக்குச் சென்றுள்ளார் ரம்யா. இவரது திட்டத்துக்கு பெருமாளும், சீனுவளவனும் உடந்தையாக இருந்திருக்கின்றனர். திட்டமிட்டபடி கடந்த 17-ம் தேதி சுதாகரை மது குடிக்க அழைத்துசென்ற நண்பன் சீனுவளவன், மறைத்து கொண்டு வந்திருந்த விஷத்தை மதுவில் கலந்து சுதாகரிடம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

விஷம் கலந்த மது எனத் தெரியாமல் சுதாகரும் வாங்கி குடித்திருக்கிறார். பிறகு, ஏரிக்கரை அருகிலுள்ள காரியமேடை பகுதியில் சுதாகரைப் படுக்க வைத்துவிட்டு, அங்கிருந்து சீனுவளவன் சென்றுவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. வாயில் நுரைத் தள்ளியபடி இறந்து கிடந்த சுதாகரைப் பார்த்த உறவினர்களிடம், `குடிச்சு குடிச்சே செத்துட்டான். என் வாழ்க்கையே போச்சே..’ என கதறி அழுது நடித்திருக்கிறார் மனைவி ரம்யா. ரம்யாவின் நடிப்பை நம்பி ஏமாந்த உறவினர்கள், சுதாகரைக் குறைச்சொல்லியபடி மறுநாள் காலை அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகள் செய்து அடக்கம் செய்துவிட்டார்கள். அதன் பிறகே, சுதாகரின் நெருங்கிய நண்பனும், வி.சி.க நிர்வாகியுமான சீனுவளவன், இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளாதது குறித்து ஊர்க்காரர்களுக்கும், சுதாகரின் உறவினர்களுக்கும் கேள்வியெழுந்து, சந்தேகம் ஏற்பட்டது.

தன் மீது சந்தேகப் பார்வைப் பட்டதும் சுதாரித்துக்கொண்ட சீனுவளவன் திடீரென சபரிமலைக்கு மாலை அணிந்துகொண்டார். ஆனாலும், நண்பனைக் கொன்ற குற்ற உணர்வு அவரை உறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கடந்த 19-ம் தேதி தனது கிராமத்தின் சாலையோரமுள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலைச் செய்து கொண்டார் வி.சி.க நிர்வாகியான சீனுவளவன். ஆனாலும், சீனுவளவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவர் கொலைச் செய்யப்பட்டிருக்கலாம் எனக் கூறியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மறியல் போராட்டம் செய்தனர். பிரேத பரிசோதனைக்குப் பிறகு சீனுவளனின் சடலத்தை வாங்க மறுத்தும் போராட்டத்தை தொடர்ந்தார்கள்.

இந்த நிலையில்தான் ஒட்டுமொத்த விவகாரமும் வெளிச்சத்துக்கு வந்தது. சுதாகரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரது தம்பி, வடவணக்கம்பாடி போலீஸில் கடந்த 21-ம் தேதி புகாரளித்தார். இதையடுத்து, சேத்துப்பட்டு தாசில்தார் சசிகலா முன்னிலையில் சுதாகரின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைச் செய்தபோது, விஷம் கலந்த மது கொடுக்கப்பட்டு அவர் கொல்லப்பட்டது உறுதியானது. விவகாரம் வெளியில் வந்ததும், சுதாகரின் மனைவி ரம்யாவிடம் ஒருவித பதட்டம் காணப்பட்டது. இதனால், ரம்யாவின் செயல்பாடுகளை கண்காணித்த போலீஸார், அவரின் செல்போன் அழைப்புகளையும் ஆய்வு செய்தனர். அப்போது, ஆண் நண்பர் பெருமாள் மற்றும் வி.சி.க நிர்வாகி சீனுவளவனிடம் இருந்து அதிக அழைப்புகள் ரம்யாவுக்கு வந்தது தெரியவந்தது.

போலீஸார் தன்னை நோட்டமிடுவதை தெரிந்துகொண்ட பெருமாள் நேற்று காலை வெளியூர் தப்பிச் செல்ல முயன்றார். அப்போது அவரை மடக்கிப் பிடித்த போலீஸாரிடம், குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, ரம்யாவையும் போலீஸார் கைது செய்தனர். கணவனுக்கு மதுவில் விஷம் கலந்து கொலைச் செய்ய வி.சி.க நிர்வாகி சீனுவளவனுக்கு ரூ.3 லட்சம் கொடுப்பதாகக் கூறினாராம் ரம்யா. அதற்கு ஒப்புக்கொண்டே சீனுவளவன் நண்பன் என்றும் பார்க்காமல் சுதாகரைக் கொலைச் செய்துள்ளாராம். குற்ற உறுத்தல் காரணமாக, சீனுவளவனும் தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக்கொண்டதும், விசாரணையில் தெளிவாகத் தெரியவந்திருக்கிறது. இதைத்தொடர்ந்து, இவ்வளவுப் பெரிய சம்பவத்தை சாதாரணமாக நிகழ்த்திய ரம்யாவும், பெருமாளும் நீதிமன்றக் காவலில் வேலூர் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும், கொலைக்காக பயன்படுத்திய 4 செல்போன்கள் மற்றும் டூவீலர்களையும் போலீஸார் பறிமுதல் செய்திருக்கின்றனர்.

Comments

Popular posts from this blog

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு  திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த வெம்பாக்கம் வட்டம் குண்டியாந்தண்டல் கிராமத்தை சேர்ந்த மன்னாரு சாமி வயது 89 இவர் தினமும் காலை 7 மணி அளவில் குண்டியாந் தண்டல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம் அதுபோல் 13 11 2025 அன்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அனைவரும் அக்கம்பக்கம் தேடியதில் அதே ஊரைச் சேர்ந்த மாதவன் என்பவர் கூறியதின் பெயரில் அருகில் இருந்த காரியா மேடைக்கு அருகில் உள்ள முட்புதாரில் இறந்து கிடந்ததாகும் அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக  தூசி காவல் நிலையத்தில் புகார் பேரில் போலீசார் விசாரணை செய்தது அதில் அதே ஊரைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் தினேஷ்குமார் வயது 25 ஜன பிரகாஷ் மகன் பிரவீன் குமார் வயது 25 இருவரும் சேர்ந்து 3 கிராம் தங்கைக்காக கொலை செய்ததாக காவல் நிலையத்தில் ஒத்துக்கொண்டனர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் வெங்கடேஷ்

மாதவரம் பொன்னியம்மன்மேடு அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

சென்னை மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு கற்பகம் நகர், நாகவல்லி அவென்யூ வில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நன்பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமிஹோமம், நவக்கிரக ஹோமம், சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, உள்ளிட்ட மூன்று கால பூஜைகள் நடைபெற்று நான்காம் கால பூஜையாக யாகசாலை பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கிராம பெரியவர்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலய விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து மூலவர் உற்சவர் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.  ஸ்ரீ வர சித்தி விநாயகர் பல்வேறு வண்ண மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.  கும்பாபிஷே விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்ன...

“உன் கணவனின் விந்தில் விஷம் உள்ளது... என்னுடன் உறவு கொள்..!” - சிக்கிய ‘பலான’ போதகர்..!

  கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பெந்தகொஸ்தே சபையில் மதபோதகராக இருந்து வருபவர் ரெஜிமோன். சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக் குறைவாக இருப்பதாக சபைக்கு வந்துள்ளார். அவருக்காக ரெஜிமோன் வேண்டுதல் செய்த நிலையிலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல் ஆரோக்கியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் சபைக்கு வராதது குறித்து கேட்ட ரெஜிமோன், சரியாக சபைக்கு வரும்படி கூற அந்த பெண்ணும் சென்றுள்ளார். அப்படி அந்த பெண் செல்லும்போதெல்லாம் அவருக்கு தனியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என அழைத்து சென்ற ரெஜிமோன், உனது மார்பகம் அழகாக இருக்கிறது என்று வர்ணனை செய்து சில்மிஷ முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் “உனது கணவனின் விந்தில் விஷம் உள்ளது. அதனால்தான் உனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. நீ என்னுடன் உறவுக் கொண்டால் அதை சரிசெய்ய முடியும். எனது பரிசுத்தமான விந்து அந்த விஷத்தை போக்கும்” என்று கதைகளை அளந்து விட்டுள்ளார்.   சம்பவத்தன்று அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்து அவரை வன்கொடு...