தஞ்சாவூரைச் சேர்ந்த சிலம்பம் பயிற்சியாளர், டாக்டர். வீ. விஸ்வேஸ்வரன், அவரது பக்கத்து வீட்டில் குடியிருந்து வரும் கார்த்திக் அவர்கள்,விஸ்வேஸ்வரன் சிலம்பத்தில் நாட்டம் மிக்கவராக இருந்ததினால், அவருக்கு சிலம்பம் கற்றுக் கொடுத்த காரணத்தால், விஸ்வேஸ்வரன் சிலம்பம் கற்றுக்கொள்ள மிகுந்த ஆர்வம் மிக்கவராக இருந்ததை புரிந்துகொண்ட கார்த்திக் அவர்கள், அவரது ஆசான்(குரு) சோமு(எ) யோவான் அவர்களிடம்,வீ. விஸ்வேஸ்வரனை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.விஸ்வேஸ்வரனும் அவரிடம், எட்டு ஆண்டுகள் திறன்பட நன்கு பயிற்சி பெற்று, இதன் பின்பாக சேவோன் சிலம்பம் பயிற்சி பள்ளியை, கீழவாசல் குறிஞ்சி தெருவில் உள்ள,' மாநகராட்சி பள்ளியில் துவங்கி, நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு சிலம்பம் பயிற்சி அளித்துள்ளார். இது மட்டுமல்லாது ஆயிரம் கணக்கான தேர்களை சிலம்பத்தால் உருவாக்கியுள்ளார்.இவரிடம் சிலம்பம் பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகள் சொல்லிக் கொடுப்பதை சிறந்த முறையில் கற்றுக் கொண்டதனால், அவர்களுடைய திறமையை நன்கு அறிந்த பயிற்சியாளர்,வீ. விஸ்வேஸ்வரன் அந்த மாணவர்களை மாவட்ட அளவிலும், மாநில அளவிலும், நடைபெறும் சிலம்பம் போட்டிக்கு அழைத்துச் சென்று அவர்களை பங்கேற்க வைத்து, சிலம்பம் போட்டியில்வெற்றிப்பெற செய்துள்ளார்.
இந்நிலையில்தான் தஞ்சை பகுதியில் உள்ள:' எஸ்டி.ஏ. மேல்நிலைப் பள்ளியில்,7-ம்வகுப்பு. பயிலும்,வி.கோவர்தணன், பெண்கள் கிறிஸ்தவ மேல்நிலைப்பள்ளியில், 9-ம் வகுப்பு பயிலும், மாது.ஸ்ரீ கீர்த்தனா, கல்யாணசுந்தரம் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில்,+2-பயிலும்,வே.சந்தோஷ்,பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்,7-ம் வகுப்பு பயிலும்,வா.சஞ்சனா, கல்யாணசுந்தரம் உதவி பெறும் மேல்நிலைப் பட்டியலில்,8-ம் வகுப்பு பயிலும், ஆ ரா. நிலா ஹரினி, தூய இருதய மலர்கள் தொடக்கப்பள்ளியில், 4-ம் வகுப்பு பயிலும்,ச.சிவகுரு, பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், 4-ம் வகுப்பு பயிலும்,எஸ்.. குரு பசும்பொன், கேலக்ஸி மழலையர்மற்றும் தொடக்கப்பள்ளியில், 5-ம் வகுப்புபயிலும், மு.தனுஷ்கா, மாநகராட்சி தொடக்கப்பள்ளியில், 5-ம் வகுப்பு பயிலும், செ. விந்தியா, மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில்,5-ம் வகுப்பு பயிலும்,மு.பிரியதர்ஷன், ஸ்ரீ வெங்கடேஸ்வரா தொடக்கப்பள்ளியில், 4-ம் வகுப்பு பயிலும், ரா.சாரதி, மேக்ஸ்வெல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்,10-ம் வகுப்பு பயிலும்,மூ.ர. நேத்ர, திருவையாறு பகுதியைச் சேர்ந்த, பிரில்லியன்ட் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில், 3-ம் வகுப்பு பயிலும்,செ. கவிபிரியன்,5-ம் வகுப்பு பயிலும், செ.கெஜளு, இம்மாகுளேட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்,7-ம் வகுப்பு பயிலும்,சி.யுகன், பத்தாம் வகுப்பு பயிலும்,பி.ஆகாஷ், அமல்ராஜ் மெட்ரிக் பள்ளியில், 5-ம் வகுப்பு பயிலும்,வி. யஷ்வந்த், அருள்நெறி உயர்நிலைப் பள்ளியில்,9-ம் வகுப்பு பயிலும்,ஆ.நரேன் ராஜ், என்.எஸ். கிருஷ்ணன் துவக்கப்பள்ளியில், 5-ம் வகுப்பு பயிலும், தர்ஷன்ராஜ் உள்ளிட்ட பள்ளிகளைச்சார்ந்த மாணவ, மாணவிகளை கொண்டு பாண்டிச்சேரியில், சர்வதேச அளவில் நடைபெற்ற, சிலம்பம் போட்டியில் பங்கேற்க வைத்து, வெற்றி பெறவும் செய்து,23- தங்கப்பதக்கங்களையும்,20-வெள்ளி பதக்கங்களையும்,2-வெண்கல பதக்கங்களையும்,வென்றுள்ளதற்கு முதல் காரணமாக இருந்தவர், சிலம்பம் பயிற்சியாளர்,ஆர்.ராஜேஷ், இரண்டாவதாக மேற்கண்ட பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியபெருமக்கள், எல்லாவற்றிற்கும் மேலாக எந்த தடைகளும் இன்றி, நல்ல ஒத்துழைப்பு நல்கியபெற்றோர்கள், இதற்கு அப்பாற்பட்டு தான் மாணவ, மாணவிகளின் கடின உழைப்பு, விடாமுயற்சி, நம்பிக்கையானபயிற்சி இத்தனையையும் உள்ளடக்கிதான், இந்த சாதனையை படைத்துள்ளார்கள் என்றுதான் சொல்லப்பட வேண்டும். இவர்களைப் பார்த்தாவது இனி வரும் இளைஞர்கள் உங்களுக்கு ஆர்வமுள்ள விளையாட்டுகளில் பங்கேற்று பல சாதனைகளை படைத்து,உங்களை வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்களுக்கும், கல்விக்கண் திறந்து வைத்த குரு என்று சொல்லக்கூடிய ஆசிரியர் பெருமக்களுக்கும், எல்லாவற்றிற்கும் மேலாக நம் தேசத்திற்கும் பெருமை சேர்க்க வேண் டும் என்பதே எங்களுடைய விருப்பமும் கூட...?
செய்தியாளர் வேங்கை குணா

Comments
Post a Comment