Skip to main content

செங்குன்றத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாணவர்களுக்கு விலையில்லா ரொட்டி, பால், முட்டை

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் ஆணைக்கிணங்க அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்ஸி என். ஆனந்த் வழிகாட்டுதல்படி சென்னை கிழக்கு மாவட்டத் தலைவர் அம்பத்தூர் ஜி.பாலமுருகன் தலைமையில் பள்ளி பயிலும் மாணவ - மாணவிகளுக்கு தமிழக வெற்றிக் கழகம் மாதவரம் தொகுதி செங்குன்றம் நகரம் சார்பில் விலையில்லா ரொட்டி, பால், முட்டை வழங்கும் திட்டம் கடந்த மூன்று வாரங்களாக வழங்கப்பட்டு வருகின்றது.

அதன் தொடர்ச்சியாக விலையில்லா ரொட்டி, பால், முட்டை, பழம்  வழங்கும் நிகழ்ச்சி 4வது வாரமாக செங்குன்றம் தமிழக வெற்றிக் கழகம் நகர தலைவர் விஜி தொடங்கி வைத்தார்.  இதில் தமிழக வெற்றிக்கழக செங்குன்றம் நகர நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் ரஞ்சித் 

Comments