கும்மனூர் சிஎஸ்ஐ பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை மாதவரம் எம்எல்ஏ சுதர்சனம் துவக்கி வைத்தார்.!
முதலமைச்சரின் காலை உணவு திட்டம் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் விரிவாக்கம் செய்யப்பட்டு திருவள்ளூர் மாவட்டம், கீழச்சேரி புனித அன்னாள் பள்ளியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக மாதவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சோழவரம் ஊராட்சி ஒன்றியம், கும்மனூர் ஊராட்சியில் உள்ள கும்மனூர் சி.எஸ்.சி பள்ளியில் காலை உணவு திட்டம் துவங்கும் நிகழ்ச்சி சோழவரம் ஒன்றிய துணை பெருந்தலைவரும், சோழவரம் தெற்கு ஒன்றிய செயலாளருமான மீ.வே.கருணாகரன் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளரும், மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான மாதவரம் எஸ்.சுதர்சனம் கலந்து கொண்டு காலை உணவு திட்டத்தினை துவக்கி வைத்தார்.
இதில் கும்மனூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜி.வேதா முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை ஆலய செல்வி வரவேற்புரை ஆற்றினார்.இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர், கல்வி அலுவலர் மற்றும் ஊராட்சி செயலாளர் து.அரசன், கும்மனூர் நா.குமரேசன், நா.பரசுராமன், பாஸ்கர் மற்றும் கழக முன்னோடிகள் ஆசிரியர்கள் மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் ரஞ்சித்

Comments
Post a Comment