செங்குன்றம் புள்ளிலைன் லயன்ஸ் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா, புதிய உறுப்பினர்கள் இணைப்பு விழா செங்குன்றம் அடுத்த பம்மதுகுளம் செங்குன்றம் லயன்ஸ் சங்க சமுதாய நலக் கூடத்தில் தலைவர் ஹெச்.பிரபாகர் தலைமையில் நடைபெற்றது. முதல் துணை ஆளுநர் பி.மணிசேகர் புதிய நிர்வாகிகளான கே.மந்திரமூர்த்தி, செயலாளராக எம்.செல்வராஜ், பொருளாளராக ஏ.பிரேமலதா ஆகியோரை பதவிப் பிரமாணம் செய்து வைத்து சிறப்புரையாற்றினார். இரண்டாம் துணை ஆளுநர் ஆர்.நரசிம்மன் புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து வைத்தார். புதிதாக தலைவர் பொறுப்பேற்றுக் கொண்ட கே.மந்திரமூர்த்தி ஏற்புரையாற்றினார்.
முன்னாள் ஆளுநர்கள் டி.துளசிங்கம், பி.வி.ரவீந்திரன், நிதி ஒருங்கிணைப்பாளர் (தேர்வு) சி.ராஜேஷ், மாவட்ட கவுன்சில் ஒருங்கிணைப்பாளர் ஜி.சங்கரி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.டி. தனராஜு, மண்டலத் தலைவர் என்.கணேசன், வட்டாரத் தலைவர் ஹெச்.பிரபாகர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.இதில் புழல் ஒன்றிய பெருந்தலைவர் தங்கமணி திருமால், புள்ளிலைன் தலைவர் தமிழ்ச்செல்வி ரமேஷ், துணைத்தலைவர் கே.மாதவன், லயன்ஸ் மாவட்டத் தலைவர்கள் இரா.ஏ.பாபு, சரவணன், மோகன்குமார், ஆர்.முனுசாமி, என்.சந்திரசேகர், கா.ஷண்முக சுந்தரம், நண்பன் எம்.முகம்மது அபுபக்கர், ஆர்.செல்வக்குமார், லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பாடியநல்லூர் தலைவர் மணிவண்ணன், செயலாளர் குமார், சென்னை சோசியல் செயலாளர் எஸ்.ரமேஷ், முன்னாள் தலைவர் எம்.அன்சர் பாத்திமா மற்றும் ஆர்.சுப்பிரமணி, ரமேஷ் ராகவேந்திரா, லட்சுமி நாராயணன், பவானி சங்கர், துரை ரமேஷ், நடைபயிற்சி பயில்வோர் சங்க செயலாளர் பவானி சங்கர், சி.ஏழுமலை, செல்வம், குமார், கன்னியப்பன், சரவணன், சாக்ரடீஸ் உள்ளிட்ட லயன்ஸ் சங்க மாவட்ட, சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்துகொண்டனர். ஜி.வடிவேலன் அழகாக தொகுத்து வழங்கினார்.
இந்நிகழ்வில் அரசு பள்ளியில் பயிலும் மாணாக்கர்களுக்கு சீருடைகளும் கல்வி உபகரணங்களும், தூய்மைப் பணியாளர்களுக்கு 3 பேருக்கு தலா 26 கிலோ அரிசி, பவானிநகர் நூலகத்திற்கு ரூ. 1000 புரவலர் கட்டணம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.
செய்தியாளர் ரஞ்சித்

Comments
Post a Comment