தவெக கட்சியின் தலைவர் விஜய் அவர்களின் 50வது பிறந்த நாளை முன்னிட்டு 50 குழந்தைகளுக்கு புத்தக பை வழங்கப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அவர்களின் 50 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இந்த மாதம் ஜூன் 1 முதல் 22 ஆம் தேதி வரை பிறந்தநாள் விழா கொண்டாட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக இன்று தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் 3 செண்ட் பகுதியில் நடைபெற்ற விழாவில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் கலந்து கொண்டு பள்ளி ஏழை குழந்தைகளுக்கு 50 புத்தக பை வழங்கினார்.
இதில் கலந்துகொண்ட குழந்தைகளுடன் கேக் வெட்டி அவர்களுக்கு இனிப்பு வழங்கி பிறந்தநாள் விழா கொண்டாட்டம் ஆரம்பிக்கப்பட்டது.விழாவில் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள்,கழகத்தின் தோழர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் அ .ரவி

Comments
Post a Comment