தீர்த்த கரையம்பட்டில் கால்பந்து பயிற்சி வீரர்களுக்கு சீருடை வழங்கிய திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர்
தீர்த்த கரையம்பட்டில் கால்பந்து பயிற்சி வீரர்களுக்கு சீருடை வழங்கிய திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர்
புழல் ஒன்றியம் தீர்த்தக்கிரியம்பட்டு கிராமத்தில் கோடைக்காலத்தில் மாணவர்களின் விளையாட்டுத் திறமையை மேம்படுத்தவும் விடுமுறையை பயனுள்ள வகையில் பயன்படுத்திக் கொள்ளவும் கால்பந்து பயிற்சி நடைபெற்று வருகின்றது.
இப்பயிற்சியில் பங்கு கொள்ளும் 50க்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு ஜெர்சி மற்றும் ஷார்ட்ஸ் தேவை என்று பயிற்சியாளர்கள் கதிரவன், சந்திரகுமார், இளம்பாரதி, எழில், சாரதி, ஹரிஷ் ஆகியோர் புழல் ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் செ. யுவராஜிடம் வைத்த வேண்டுகோளை ஏற்று உடனடியாக அதற்கான ஏற்பாடு செய்து சிறுவர்களுக்கு வழங்கினார். அவருக்கு பயிற்சியாளர்கள், சிறுவர்கள் தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில் தியாகு, அறிவழகன், மோசஸ், அருண், கலை, சாலமன், பிரேம், சேது,தினேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் ரஞ்சித்

Comments
Post a Comment