செ.புதூர் ஆர்எஸ். மோட்டார்ஸ், ஆடுதுறை வேலன் மோட்டார்ஸ் நிறுவனங்களின். உரிமையாளர், லயன்.மு. இராஜசிங்கார வேலன் தந்தையார் ஏ.ஆர். முருகேசன் நினைவேந்தல்,. கும்பகோணம், டாக்டர். மூர்த்தி சாலை அருகே உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் செ.இராமலிங்கம், தலைமை வகித்தார்.
சட்டமன்ற தலைமைக்கொறடா. முனைவர் கோவி. செழியன் முன்னிலையில் கதராடை வேந்தர், சேவைச் செம்மல்,எ. ஆர்.முருகேசன் திருஉருவப் படத்தை, கும்பகோணம், டாக்டர். மூர்த்தி. சாலையில் உள்ள அவரது இல்லத்தில், கூட்டுறவுத்துறை பணிநிறைவு துணைப் பதிவாளர் ந. குணசேகரன் திறந்து வைத்தார்.
ஸ்ரீ சோழா கல்வி நிறுவனத் தாளாளர் ஆர்.சிவசைலம், ஆசிரியை விஜயஸ்ரீ, எஸ்.புதூர் ஸ்கை வெல் ஷைன் லயன்ஸ் சங்க சாசனத் தலைவர்,ச. கார்த்திகேயன், பொறியாளர் விஜய்,. மற்றும் உறவினர்களும், நண்பர்களும் புகழஞ்சலி செலுத்தினர்.காதி கிராப்ட் மேலாளர் மு.இராஜாராமன் நன்றி கூறினார்.
செய்தியாளர் வேங்கை குணா


Comments
Post a Comment