தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனது கட்சியை பலப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் தனது கட்சி நிர்வாகிகள் மூலம் ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக மாதவரம் சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் பாலமுருகன் ஆணைக்கிணங்க செங்குன்றம் அடுத்த தீர்த்கரையம்பட்டு சமுதாய நலக்கூடத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்தும், கிளைக் கழகங்கள் துவங்குவது குறித்தும், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் பூத் கமிட்டி அமைப்பது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக வெற்றிக்கழக மாவட்ட,ஒன்றிய,,நகர நிர்வாகிகள், மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
செய்தியாளர் ரஞ்சித்

Comments
Post a Comment