கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகிலுள்ள கண்டப்பன்குறிச்சியில் கடலூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலை அருகில் அமைந்துள்ள ஸ்ரீ பவானி உடற்கல்வியியல் கல்லூரியில் பிரிவு உபச்சார விழா மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் தாளாளர் ஜெ. நாராயணன் தலைமையில் நடந்தது. ஸ்ரீ பவானி கல்வி குழுமத்தின் செயலாளர் மகாலட்சுமி நாராயணன் முன்னிலை வகித்தார்.
ஸ்ரீ பவானி கல்வி குழுமத்தின் நிர்வாக அலுவலர் பொன். சடையமுத்து வரவேற்புரையாற்றினார். ஸ்ரீ பவானி உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர் நல்லமுத்து, உதவி பேராசிரியகள் ராஜா, ஞானபிராகசம், கலை கல்லூரி முதல்வர் பாலமுருகன், கல்வியியல் கல்லூரி முதல்வர் பாலகிருஷ்ணன், ஆசிரியர்கள்
கல்லூரி மாணவர்களின் பிரிவு உபசார விழாவில் கலந்து கொண்டனர். கல்லூரி மாணவ மாணவிகள் தங்களது நடன திறமைகளை வெளிப்படுத்தினர்.
அப்பொழுது, பல்வேறு பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்ட பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டி கௌரவப்படுத்தப்பட்டது.
செய்தியாளர் விஜய்

Comments
Post a Comment