Skip to main content

ஜூன் 4க்கு பிறகு நடக்கும் மாற்றம்..! கை மாறும் அதிமுக..? - டிடிவி தினகரனை கைகாட்டும் அண்ணாமலை..!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வரும் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரம் வரும் புதன்கிழமையுடன் நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சி பிரமுகர்கள் உச்சக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பாஜக தலைமையில் போட்டியிடும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை ஆதரித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று தேனி மக்களவைத் தொகுதியில் பிரச்சாரம் செய்தார்.


அப்போது பேசிய அவர் , அண்ணாமலையும், டிடிவி தினகரனும் இணைந்துள்ளதாக தமிழகத்தின் அரசியல் மாறுவதாக தெரிவித்தார். அமமுக சார்பில் டிடிவி தினகரன், தனது தொண்டரை நிறுத்தியிருக்கலாம். ஆனால் 400 இடங்களை பெற்று மோடி தலைமையில் ஆட்சி அமைய வேண்டும், அதில் தேனியின் குரலாக தானும் இருக்க வேண்டும் என்பதால் டிடிவி தினகரன் போட்டியிடுவதாக கூறினார்.

மேலும் மோடியிடம் இருந்து இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியதற்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை, தமிழகத்தை முதலில் ஸ்டாலினிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்றார். தமிழகத்தை கோபாலபுரம் குடும்பத்திடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்றும் 33 மாதங்களாக அவர்கள் தமிழகத்தில் கொள்ளையடித்துக் கொண்டிருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

ஸ்டாலின் தலைமையில் உள்ள திமுகவும், எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் உள்ள அதிமுகவும் ஒன்றுதான். கட்சியின் பெயர்களும் தொண்டர்களும்தான் வேறு, ஆனால் தலைவர்களும் அவர்களின் செயல்பாடுகளும் ஒன்றுதான் என்றும் அண்ணாமலை தெரிவித்தார். டிடிவி தினகரனை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக இரண்டு வேட்பாளர்களும் இணைந்து செயல்படுகிறார்கள் என்றும் அண்ணாமலை குற்றம்சாட்டினார்.மேலும் ஜூன் 4 ஆம் தேதிக்கு பிறகு அதிமுக டிடிவி தினகரனின் கைக்கு வந்துவிடும் என்றும், அதிமுக தொண்டர்கள் அனைவரும் தேர்தலுக்கு பிறகு அமமுகவுடன் இணைய போகிறார்கள் என்றும் தெரிவித்தார். தங்களை வழிநடத்தக் கூடிய உண்மையான தலைவன் யார் என்பது தொண்டர்களுக்கு தெளிவாக தெரியும் என்றும் கூறிய அண்ணாமலை, பூச்சாண்டிகளையும், போலித் தலைவர்களையும் தொண்டர்கள் கண்டுபிடித்து விடுவார்கள் என்றும் கூறினார்.

அதிமுக டிடிவி தினகரனின் கையில் இருந்திருந்தால், ஸ்டாலின் முதல்வர் ஆகியிருக்க முடியாது என்றும் அண்ணாமலை தெரிவித்தார். ஸ்டாலினுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் டிடிவி தினகரனை பிடிக்காது என்றும் அதனால் அவரை தோற்கடிக்க முயன்று வருகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே தேர்தலுக்கு பிறகு அதிமுக அழிந்து போய்விடும் என்று அண்ணாமலை கூறியிருந்தார். அதற்கு அதிமுக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் தற்போது தேர்தலுக்கு பிறகு அதிமுக டிடிவி தினகரன் வசம் வந்துவிடும் என அண்ணாமலை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments

Popular posts from this blog

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு  திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த வெம்பாக்கம் வட்டம் குண்டியாந்தண்டல் கிராமத்தை சேர்ந்த மன்னாரு சாமி வயது 89 இவர் தினமும் காலை 7 மணி அளவில் குண்டியாந் தண்டல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம் அதுபோல் 13 11 2025 அன்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அனைவரும் அக்கம்பக்கம் தேடியதில் அதே ஊரைச் சேர்ந்த மாதவன் என்பவர் கூறியதின் பெயரில் அருகில் இருந்த காரியா மேடைக்கு அருகில் உள்ள முட்புதாரில் இறந்து கிடந்ததாகும் அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக  தூசி காவல் நிலையத்தில் புகார் பேரில் போலீசார் விசாரணை செய்தது அதில் அதே ஊரைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் தினேஷ்குமார் வயது 25 ஜன பிரகாஷ் மகன் பிரவீன் குமார் வயது 25 இருவரும் சேர்ந்து 3 கிராம் தங்கைக்காக கொலை செய்ததாக காவல் நிலையத்தில் ஒத்துக்கொண்டனர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் வெங்கடேஷ்

மாதவரம் பொன்னியம்மன்மேடு அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

சென்னை மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு கற்பகம் நகர், நாகவல்லி அவென்யூ வில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நன்பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமிஹோமம், நவக்கிரக ஹோமம், சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, உள்ளிட்ட மூன்று கால பூஜைகள் நடைபெற்று நான்காம் கால பூஜையாக யாகசாலை பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கிராம பெரியவர்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலய விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து மூலவர் உற்சவர் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.  ஸ்ரீ வர சித்தி விநாயகர் பல்வேறு வண்ண மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.  கும்பாபிஷே விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்ன...

“உன் கணவனின் விந்தில் விஷம் உள்ளது... என்னுடன் உறவு கொள்..!” - சிக்கிய ‘பலான’ போதகர்..!

  கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பெந்தகொஸ்தே சபையில் மதபோதகராக இருந்து வருபவர் ரெஜிமோன். சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக் குறைவாக இருப்பதாக சபைக்கு வந்துள்ளார். அவருக்காக ரெஜிமோன் வேண்டுதல் செய்த நிலையிலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல் ஆரோக்கியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் சபைக்கு வராதது குறித்து கேட்ட ரெஜிமோன், சரியாக சபைக்கு வரும்படி கூற அந்த பெண்ணும் சென்றுள்ளார். அப்படி அந்த பெண் செல்லும்போதெல்லாம் அவருக்கு தனியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என அழைத்து சென்ற ரெஜிமோன், உனது மார்பகம் அழகாக இருக்கிறது என்று வர்ணனை செய்து சில்மிஷ முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் “உனது கணவனின் விந்தில் விஷம் உள்ளது. அதனால்தான் உனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. நீ என்னுடன் உறவுக் கொண்டால் அதை சரிசெய்ய முடியும். எனது பரிசுத்தமான விந்து அந்த விஷத்தை போக்கும்” என்று கதைகளை அளந்து விட்டுள்ளார்.   சம்பவத்தன்று அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்து அவரை வன்கொடு...