Skip to main content

விஐடி பல்கலைக்கழக மாணவரின் விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை திருட முயன்ற இரண்டு திருடர்கள் கைது..

 காட்பாடி விஐடி பல்கலைக்கழக மாணவரின் விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை திருட முயன்ற இரண்டு திருடர்கள் கைது..


வேலூர் மாவட்டம் காட்பாடியில் விஐடி தனியார் பல்கலைக்கழகம் உள்ளது இங்கு பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவ,மாணவிகள் பயின்று வருகின்றனர் அதில் அவர்கள் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர் இந்த நிலையில் விஐடி பல்கலைக்கழக மூன்றாவது கேட்டின் அருகில் நான்காம் ஆண்டு பிடெக் படிக்கும் மாணவர் அபினய் குமார் ரெட்டி என்பவர் தனது யமஹா R15 என்ற விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார் இதனை நோட்டமிட்ட இரண்டு பேர் இருசக்கர வாகனத்தை திருட முயன்றனர் அவர்களை அடித்து உதைத்து காட்பாடி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர் காட்பாடி காவல் நிலைய உதவியாளர் பால வெங்கட்ராமன் வழக்குபதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரணை செய்ததில் அவர்கள் காட்பாடி தாராபடவேடு குளக்கரை பகுதியை சேர்ந்த பாலா (எ) பலராமன் மற்றும் காட்பாடி பாரதி நகரை சேர்ந்த சீனு (எ)சீனிவாசன் என்பதும் இவர்கள் மீது திருட்டு வழிபறி கொலை கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது தெரியவந்தது இதனை அடுத்து இருவரையும் காட்பாடி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்

செய்தியாளர் : சுரேஷ் 

Comments