Skip to main content

’மிஷன் 2047’ CD... PFI போட்ட பிளான்..? அதிர்ந்து போன உள்துறை அமைச்சகம்..!

 ’மிஷன் 2047’ CD... PFI போட்ட பிளான்..? அதிர்ந்து போன உள்துறை அமைச்சகம்..!



PFI எனப்படும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு தடை செய்த விஷயம் தான் தேசிய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. இதனுடன் தொடர்புடைய RIF, CFI, AIIC, NCHRO, நேஷனல் உமன் ஃப்ரண்ட், ஜூனியர் ஃப்ரண்ட், எம்பவர் இந்தியா பவுண்டேஷன் மற்றும் ரிஹாப் பவுண்டேஷன், கேரளா ஆகியவையும் தடை செய்யப்பட்டுள்ளன. முன்னதாக 17க்கும் மேற்பட்ட மாநிலங்களில் என்.ஐ.ஏ ரெய்டு நடத்தி பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது 1,300க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இந்த சூழலில் பி.எஃப்.ஐ அமைப்பினரின் வீடுகள், அலுவலகங்கள், ஆதரவாளர்களின் வீடுகளில் ரெய்டு நடத்திய மத்திய புலனாய்வு அமைப்புகளின் கைகளில் அதிர்ச்சியூட்டும் பல்வேறு விஷயங்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த பி.எஃப்.ஐ தலைவரான முகமது நதீமிடம் இருந்து முக்கிய ஆவணம் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.அதில் ஐ.இ.டி குண்டுகளை எளிதில் கிடைக்கக் கூடிய பொருட்களை பயன்படுத்தி எப்படி தயாரிப்பது போன்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளன. இதேபோன்ற ஆவணம் மற்றொரு பி.எஃப்.ஐ தலைவரான அகமது பெக் நத்வியிடம் இருந்தும் கைப்பற்றப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த பி.எஃப்.ஐ துணைத் தலைவரிடம் இருந்து ”மிஷன் 2047” என்ற பெயரிலான ஆவணம் மற்றும் சிடி கைப்பற்றப்பட்டுள்ளது.


அதில் அடுத்தகட்டமாக நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் குறித்து விரிவான தகவல்கள் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் கைப்பற்றப்பட்ட பென் ட்ரைவில் ஐஎஸ்ஐஎஸ், கஜ்வா-இ-ஹிந்த் உள்ளிட்ட அமைப்புகளுடன் தொடர்புடைய வீடியோக்கள் இடம்பெற்றிருப்பதாக தெரிகிறது. இது தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



பி.எஃப்.ஐ அமைப்பு மீதான தடைக்கு பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ரா டெனியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார். அதற்கு, என்.ஐ.ஏ தொடர்ந்து விசாரித்து வருகிறது. உரிய ஆதாரங்களின் அடிப்படையில் தான் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.நமது நாட்டிற்கு பி.எஃப்.ஐ அச்சுறுத்தும் விஷயமாக இல்லையெனில் எதற்காக தடை செய்யப் போகிறார்கள்? என்று பதிலடி கொடுத்தார். இந்நிலையில் தடை செய்யப்பட்ட பி.எஃப்.ஐ அமைப்பின் யூடியூப், பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்கள் மற்றும் இணையதளம் முடக்கப்பட்டு விட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு  திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த வெம்பாக்கம் வட்டம் குண்டியாந்தண்டல் கிராமத்தை சேர்ந்த மன்னாரு சாமி வயது 89 இவர் தினமும் காலை 7 மணி அளவில் குண்டியாந் தண்டல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம் அதுபோல் 13 11 2025 அன்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அனைவரும் அக்கம்பக்கம் தேடியதில் அதே ஊரைச் சேர்ந்த மாதவன் என்பவர் கூறியதின் பெயரில் அருகில் இருந்த காரியா மேடைக்கு அருகில் உள்ள முட்புதாரில் இறந்து கிடந்ததாகும் அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக  தூசி காவல் நிலையத்தில் புகார் பேரில் போலீசார் விசாரணை செய்தது அதில் அதே ஊரைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் தினேஷ்குமார் வயது 25 ஜன பிரகாஷ் மகன் பிரவீன் குமார் வயது 25 இருவரும் சேர்ந்து 3 கிராம் தங்கைக்காக கொலை செய்ததாக காவல் நிலையத்தில் ஒத்துக்கொண்டனர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் வெங்கடேஷ்

மாதவரம் பொன்னியம்மன்மேடு அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

சென்னை மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு கற்பகம் நகர், நாகவல்லி அவென்யூ வில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நன்பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமிஹோமம், நவக்கிரக ஹோமம், சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, உள்ளிட்ட மூன்று கால பூஜைகள் நடைபெற்று நான்காம் கால பூஜையாக யாகசாலை பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கிராம பெரியவர்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலய விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து மூலவர் உற்சவர் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.  ஸ்ரீ வர சித்தி விநாயகர் பல்வேறு வண்ண மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.  கும்பாபிஷே விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்ன...

“உன் கணவனின் விந்தில் விஷம் உள்ளது... என்னுடன் உறவு கொள்..!” - சிக்கிய ‘பலான’ போதகர்..!

  கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பெந்தகொஸ்தே சபையில் மதபோதகராக இருந்து வருபவர் ரெஜிமோன். சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக் குறைவாக இருப்பதாக சபைக்கு வந்துள்ளார். அவருக்காக ரெஜிமோன் வேண்டுதல் செய்த நிலையிலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல் ஆரோக்கியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் சபைக்கு வராதது குறித்து கேட்ட ரெஜிமோன், சரியாக சபைக்கு வரும்படி கூற அந்த பெண்ணும் சென்றுள்ளார். அப்படி அந்த பெண் செல்லும்போதெல்லாம் அவருக்கு தனியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என அழைத்து சென்ற ரெஜிமோன், உனது மார்பகம் அழகாக இருக்கிறது என்று வர்ணனை செய்து சில்மிஷ முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் “உனது கணவனின் விந்தில் விஷம் உள்ளது. அதனால்தான் உனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. நீ என்னுடன் உறவுக் கொண்டால் அதை சரிசெய்ய முடியும். எனது பரிசுத்தமான விந்து அந்த விஷத்தை போக்கும்” என்று கதைகளை அளந்து விட்டுள்ளார்.   சம்பவத்தன்று அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்து அவரை வன்கொடு...