2 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் பால்வளத்துறை அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார்
முதலமைச்சர் அவர்கள் "பசுமை தமிழகம்" திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் மரக்கன்றுகள் நடப்படுவதற்கு அறிவுறுத்தியதன் அடிப்படையில் இன்று திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், ஏகாட்டூர் கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மாவட்டம் முழுவதும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடும் பணிகளை மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் .சா.மு.நாசர் துவக்கி வைக்கும் விதமாக மரக்கன்றுகளை நடவு செய்து மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ் . முன்னிலையில்பெருமளவு மரக்கன்றுகள் நடும் பணிகளை துவக்கி வைத்தார்.
செய்தியாளர் ஆசைத்தம்பி

Comments
Post a Comment