திருவண்ணாமலையில் மத்திய பேருந்து நிலையம் உள்ளது. தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து பேருந்துகள் வந்து செல்கிறது. இப்பேருந்துகளில் பக்தர்கள், கிராம மக்கள், வர்த்தகர்கள், விவசாயிகள், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் என அனைத்து நிலைகளில் உள்ள மக்களும் வந்து செல்கின்றனர். ஆனால், இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கிடைப்பதில்லை.
இந்நிலையில், இலவச செயல்பட்டு வந்த கழிப்பறை மூடப்பட்டு, கட்டண கழிப்பறையாக மாற்றப்பட்டுள்ளது. இயற்கை உபாதைக்கு 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நகராட்சி நிர்ணயம் செய்த கட்டணத்தை விட, இரு மடங்கு கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. இதனால் பயணிகள் மற்றும் நடத்துநர்கள், ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் திறந்தவெளி இடத்தை பயன்படுத்திக் கொள்ளும் நிலை தொடர்கிறது. பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் நகராட்சி நிர்வாகம், மத்திய பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகளுக்கு சுகாதாரமான குடிநீர் மற்றும் கழிப்பறையை இலவசமாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.
செய்தியாளர் மூர்த்தி


Comments
Post a Comment