சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் வேங்காவயல் ஊராட்சிக்கு உட்பட்ட சின்ன வேங்கா வயலில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் அருகே உள்ள கிராமங்களான புதுக்கண்டனூர், வலையன் வயல், சின்ன வேங்காவயல் , பெரிய வேங்காவயல், புதுவயல் காமராஜர் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இப்பள்ளியில் மாணவர்களின் கல்வியுடன் சேர்த்து தனித்திறன்களை வளர்ப்பதில் இப்படி முக்கிய பங்கு வகிக்கிறது. பேச்சுப்போட்டி, ஓவியம் சிலம்பம் அறிவியல் துறை என பலத்துறைகளில் மாணவர்கள் சிறப்பாக கற்று தேர்ச்சி அடைந்து வருகின்றனர். ஸ்மார்ட் கிளாஸ் வசதி, கணினி வழி கல்வி, இன்னும் எழுத்தும் வகுப்பறைகள், இணையதள வசதி என பல வசதிகளுடன் கூடிய சிறப்பு நிறைந்த பள்ளியாக செயல்பட்டு வருகிறது. அறிவியல் புத்தக விருதுக்கான போட்டியில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் கவர்னர் மாளிகையில் நடந்த வள்ளலார் விழா பேச்சுப்போட்டியில் பரிசு, சிலம்பம் போட்டியில் தேசிய விருது தமிழ்நாடு அரசின் கலைத் திருவிழா போட்டியில் முதல் மற்றும் இரண்டாம் பரிசு போன்ற பரிசுகளை இப்பள்ளி மாணவர்கள் பெற்றுள்ளனர். 2017 சிறந்த பள்ளி விருது, காமராஜர் விருது உட்பட பல்வேறு விருதுகளை இப்பள்ளி பெற்று வந்துள்ளது. இந்நிலையில் தற்போது தமிழ்நாடு அரசு அறிவித்த அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருதும் அத்துடன் சேர்ந்து ரூபாய் பத்து லட்சத்திற்கான பணம் முடிச்சு பெற்று இப்பள்ளி பெருமை கொண்டுள்ளது. இப்ப பெருமை குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜா மணி கூறுகையில், இப்பள்ளியின் உடைய வளர்ச்சி ஒட்டுமொத்த கிராமத்தின் வளர்ச்சியாகும், இந்தப் பள்ளியின் வளர்ச்சியாகும் ஊராட்சி மன்றமே பெருமை அடைந்திருக்கிறது. இன்னும் பல்வேறு சாதனைகளைப் பெற்று தமிழ்நாட்டிலேயே முதன்மை பள்ளியாக கொண்டு வர நான் முழு மூச்சுடன் பணியாற்ற போவதாகவும் தெரிவித்தார். எது எப்படி இருந்தாலும் பள்ளியை அடையாளம் காட்டி பெருமை சேர்த்த தலைமை ஆசிரியர் மற்றும் சக ஆசிரியர்கள் பள்ளி மாணவ மாணவியர்கள் அனைவரையும் நாமும் வெகுவாக பாராட்டி மகிழ்கின்றோம்..செய்தியாளர் அண்ணாதுரை
Comments
Post a Comment