கும்மிடிப்பூண்டி பேரூராட்சி 13 வது வார்டு தபால் தெரு பகுதியில் புதிதாக எழுந்தருளி உள்ள ஸ்ரீ ராதா ருக்குமணி சமேத ஸ்ரீ வேணுகோபால சுவாமி திருக்கோவிலின் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி தபால் தெரு பகுதியில் ஸ்ரீ ராதா ருக்மிணி சமேத ஸ்ரீ வேணுகோபால சுவாமிகள் திருக்கோவில் அண்மையில் கட்டி முடிக்கப்பட்டது. தொடர்ந்து கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்ட நிலையில் கடந்த 29 தேதி பந்தக்கால் நிகழ்ச்சியுடன் கும்பாபிஷேகம் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து திங்களன்று அனுக்ஞை, குருவந்தனம், யஜமான சங்கல்பம், விஷ்வக்சேனர் ஆராதனை, மஹாகணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், சுதர்சன ஹோமம், கோ பூஜை. தனபூஜை, தீபாரதனை, யாகசாலை நிர்மானம்,சுவாமி சிலைகள் கரிவலம் வருதல், வாஸ்து சாந்தி, மிருத்சங்கிரஹணம், அங்குரார்பனம், கும்பலங்காரம், யாக சாலை பிரவேசம், கும்ப திருவாதாரனம், அக்னி பிரதிஷ்டை, முதல் கால யாக பூஜை, விசேஷ திரவ்யஹூதி, பூர்ணாஹூதி, விமான கோபுரம், கலசம், மூலவர் பிரதிஷ்டை நடைபெற்றது.,
தொடர்ந்து செவ்வாய்க்கிழமை புண்யாஹவாசனம், கும்ப திருவாதாரனம், இரண்டாம் கால யாக பூஜை, தீபாரதனை, பிரசாதம் வழங்குதல், மூன்றாம் கால யாக சாலை பூஜை, ரக்ஷா பந்தனம், திவ்ய பிரபந்த சாற்று முறை, வேத நாத கீத உபசாரம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது.
தொடர்ந்து கும்பாபிஷேக தினமான புதன்கிழமை அதிகாலை விஷ்பரூப தரிசனம், கோ பூஜை, கும்ப திருவாராதனம், நான்காம் கால யாக பூஜை, யாத்ராதானம், கடம் புறப்பாடு நிகழ்வு நடைபெற்றது. இதனை தொடர்ந்து புரோகிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க ஆலய கோபுரத்தின் மீது புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர். இதன் பின் அருள்மிகு ஸ்ரீ ராதா ருக்மிணி சமேத வேணுகோபால சுவாமிகளுக்கு மகா கும்பாபஷேகமும், மகா அபிஷேகமும், தீபாரதனையும் நடைபெற்றது. பின் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டு, பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.
பின்னர் ஸ்ரீ ராதா ருக்மிணி சமேத வேணுகோபால சுவாமிக்கு விசேஷித்த அலங்காரத்துடன், மங்கள வாத்தியம் முழங்க திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றது. பின்னர் வானவேடிக்கையும், சுவாமி திருவீதி உலாவும் நடைபெற்றது. தொடர்ந்து கும்மிடிப்பூண்டி ஹரிபஜன சபாவின் பஜனை நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேக விழாவில் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன், கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் கி.வே.ஆனந்தகுமார், கும்மிடிப்பூண்டி பேரூராட்சி தலைவர் சகிலா அறிவழகன், அதிமுக மாவட்ட பாசறை செயலாளர் டி.சி.மகேந்திரன், பாமக முன்னாள் மாவட்ட செயலாளர் ம.செல்வராஜ் உள்ளிட்ட முக்கிய
பிரமுகர்களும், கும்மிடிப்பூண்டியின் பல்வேறு பகுதிகளில் இருந்து 1000க்கும் மேற்பட்ட பக்தர்களும் பங்கேற்றனர். கும்பாபிஷேக ஏற்பாடுகளை விழா குழுவினர், தபால் தெரு மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
செய்தியாளர் பிரான்சிஸ்

.jpeg)

Comments
Post a Comment